நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் தாதா வரை..இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை : திரையரங்கில் திரைப்படத்தை பார்ப்பது என்றாலே அலாதி மகிழ்ச்சிதான். அதுவும் நம் மனசுக்கு பிடித்த நடிகர், நடிகையின் படங்களை கைத்தட்டியும், விசிலடித்தும் பார்ப்பதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்.

வெள்ளிக்கிழமை வந்து விட்டால் போதும், திரையரங்குகளில் புது புதுப்படங்கள் வெளியாவதும், அதைப்பார்க்க ஒரு கூட்டம் கூடிவிடும்.

கடந்த வாரம் கட்டா குஸ்தி, விஜய்சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படம் வெளியான நிலையில் இந்த வாரம் தியேட்டரில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்க்கலாமா?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

வைகைப்புயல் வடிவேலு நீண்ட நாட்களுக்குப்பிறகு நடித்திருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், லொள்ளு சபா மாறன், மனோபாலா, லொள்ளு சபா சேசு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 9ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.

வரலாறு முக்கியம்

வரலாறு முக்கியம்

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். நகைச்சுவை படமான இப்படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.இதில் காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, கே.எஸ்.ரவிகுமார், விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.

தா தா

தா தா

யோகிபாபு நடித்து தாதா திரைப்படம் வரும் வெள்ளிக்கிமை வெளியாக உள்ளது. இப்படத்திற்கு கிஷோர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார்.இந்த படத்தில், நான்கு சீனில் தான் நடித்துள்ளேன். எனவே, தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் என்று யோகி பாபு ட்விட்டரில் கூறினார். இதனால், இயக்குநர் கிஷோருக்கும் யோகிபாபுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

விஜயானந்த்

விஜயானந்த்

வி ஆர் எல் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக திரைப்படம் விஜயானந்த். இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

‘செப்பலானி உண்டி‘ (தெலுங்கு)

‘செப்பலானி உண்டி‘ (தெலுங்கு)

சிரஞ்சீவியின் காட் ஃபாதர் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 'செப்பலானி உண்டி' என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் யாஷ் பூரி மற்றும் ஸ்டெபி படேல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வரவேற் பெற்ற நிலையில், இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையில் வெளியாக உள்ளது.

Maa Ishtam (தெலுங்கு)

Maa Ishtam (தெலுங்கு)

பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா டேஞ்சரஸ் என்ற சர்ச்சைக்குரிய லெஸ்பியன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கில் Maa Ishtam என்ற பெயரில் 9ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X