ப்பா.. அழுக்கு நைட்டியில் அசத்திய டாப் 5 நடிகைகள்.. நயன்தாரா முதல் கயல் ஆனந்தி வரை!

சென்னை: சினிமா முதல் சீரியல் வரை வீட்டில் சாதாரணமாக இருந்தாலும் நடிகைகள் சேலை அல்லது சுடிதார் மற்றும் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டே அதிகமாக நடித்து வருகின்றனர்.

ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நைட்டி அணிந்து கொண்டு ரொம்பவே யதார்த்தமாக அந்த காட்சிக்கு தகுந்தவாறு நடித்துள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் நைட்டி அணிந்து கொண்டு செம ஹாட்டாக நடித்த டாப் 5 ஹீரோயின்கள் யார் யார் என்பது குறித்து தான் இங்கே பார்க்கப் போறோம்.

புதுப்பேட்டையில் சினேகா: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் சோனியா அகர்வாலும், சினேகாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

சோனியா அகர்வாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் நடக்கும் பார்ட்டியில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து வெறும் நைட்டி அணிந்துக் கொண்டு சினேகா செம ஹாட்டாக டான்ஸ் போட்டதை அப்போது பார்த்த ரசிகர்கள் அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

From Nayanthara to Kayal Anandhi: Top 5 Actress who wears Nighty dress in movies

நைட்டியில் நயன்தாரா: பில்லா படத்தில் பிகினி உடையிலேயே நடித்த நயன்தாராவும் நைட்டி உடையில் தனுஷ் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் ஒரு நாளைக்கு எத்தனை கனவு பாடல் காட்சியில் நடிகை நயன்தாரா தனுஷ் அருகே கட்டிலில் நைட்டி அணிந்து கனவு சீனில் படுத்து இருப்பது போல ஒரு சில காட்சிகள் வந்து மறைந்து விடுவார்.

From Nayanthara to Kayal Anandhi: Top 5 Actress who wears Nighty dress in movies

ஸ்ருதிஹாசன் செம க்யூட்: நைட்டி உடையில் ஹாட்டாக மட்டுமின்றி க்யூட்டாகவும் இருக்க முடியும் என்பதை 3 படத்தில் ஸ்ருதிஹாசன் நிரூபித்து இருப்பார்.

இதழின் ஒரு ஓரம் பாடலில் புது நைட்டியை அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க அம்மாவுடன் செல்லும் போது, குனியும் போது அந்த இடத்தில் கை வைத்து மறைத்தபடியே செம அழகாக அந்த காட்சியில் நடித்திருப்பார் ஸ்ருதிஹாசன்.

From Nayanthara to Kayal Anandhi: Top 5 Actress who wears Nighty dress in movies

கிக்கேற்றும் கயல் ஆனந்தி: சினேகாவை தொடர்ந்து நைட்டி அணிந்து கொண்டு செம ஆட்டம் போட்டது நம்ம கயல் ஆனந்தி தான். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் வேறலெவலில் நைட்டி அணிந்து மிரட்டி இருப்பார்.

அந்த படத்தில் இடம்பெற்ற அடல்ட் ஒன்லி பாடலான "பிட்டு படம் டி" பாடலில் நைட்டியில் செம கும்முன்னு வந்து குத்தாட்டம் போட்டிருப்பார் கயல் ஆனந்தி.

From Nayanthara to Kayal Anandhi: Top 5 Actress who wears Nighty dress in movies

திருச்சிற்றம்பலம் சோபனா: நடிகர் தனுஷ் உடனே பல நடிகைகள் நைட்டி அணிந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகை நித்யா மேனன் வீட்டில் அழுக்கு நைட்டி அணிந்து கொண்டு செம கேஷுவலாக பல காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்திருப்பார்.

தேன்மொழி பாடலில் தூங்கிக் கொண்டிருக்கும் நித்யா மேனனை தனுஷ் எழுப்ப அவரை துரத்திக் கொண்டு அடிக்க வரும் போது நைட்டி உடையிலே நித்யா மேனன் ஓடி வரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

From Nayanthara to Kayal Anandhi: Top 5 Actress who wears Nighty dress in movies

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நைட்டி அணிந்து நடித்துள்ளனர். தேவயாணி பொம்மிஸ் நைட்டி விளம்பரத்திலேயே நடித்துள்ளார். மலையாள படங்களில் நடிகைகள் வெகு இயல்பாக நடிப்பதற்காக சர்வ சாதாரணமாக அணிந்து நடிக்கும் நைட்டியை தமிழ் சினிமாவில் நடிகைகள் கேமரா முன்பாக அணிந்து நடிக்க இன்னமும் யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X