For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த ஆண்டின் சிறந்த நடிகை யார்? நயன்தாரா முதல் ரிது வர்மா வரை.. டாப் 10 பட்டியல் இதோ!

  |

  சென்னை: தர்பார் முதல் மூக்குத்தி அம்மன் வரை இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே படங்கள் வெளியாகி உள்ளன.

  ஆண்டின் இறுதியை நெருங்கி உள்ளதால், இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 நடிகைகள் யார் என இங்கே பார்ப்போம்.

  நயன்தாரா, ஜோதிகா, ரிதி வர்மா, ரித்திகா சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட ஹீரோயின்கள் இந்த ஆண்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

  என் பொண்ணு எத்தனை மணிக்கு செத்தான்னே தெரியல.. செத்து போயிடலாம்னு தோனுது.. கதறும் சித்துவின் தாய்!என் பொண்ணு எத்தனை மணிக்கு செத்தான்னே தெரியல.. செத்து போயிடலாம்னு தோனுது.. கதறும் சித்துவின் தாய்!

  10. மெஹ்ரின் பிர்சடா

  10. மெஹ்ரின் பிர்சடா

  பொங்கலுக்கு வெளியான தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சடா. எதிர் வீட்டு ஹீரோயின் பாடலில் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனங்களை கொள்ளையடித்தார் மெஹ்ரின். பட்டாஸ் படத்தில் நடிகை சினேகாவும் தனது அட்டகாசமான நடிப்பை இந்த ஆண்டு வெளிப்படுத்தி இருந்தார்.

  9. அதிதி ராவ்

  9. அதிதி ராவ்

  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சைக்கோ திரைப்படத்தில் சைக்கோவிடம் சிக்கி அல்லல்படும் நாயகியாக நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருந்தார் நடிகை அதிதி ராவ். உன்னை நினைச்சி நினைச்சி உருகிப் போனேன் மெழுகா என உதயநிதியுடன் சேர்ந்து ஏகப்பட்ட ரசிகர்கள் அதிதியை பார்த்து பாடத் தொடங்கினர். அந்த படத்தில் நித்யா மேனனின் நடிப்பும் அசத்தல்.

  8. கீர்த்தி சுரேஷ்

  8. கீர்த்தி சுரேஷ்

  அமேசான் பிரைமில் பெண்குயின், நெட்பிளிக்ஸில் மிஸ்டர் இந்தியா என இந்த ஆண்டு இரு படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். சர்கார் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் பெண்குயின் படத்தில் கம்பேக் ஆனார். கர்ப்பிணி பெண்ணாகவும், சைக்கோ கொலைகாரனை வேட்டையாடும் சிங்கப்பெண்ணாகவும் கீர்த்தி பெண்குயினாக நடித்து கலக்கினார்.

  7. அனுஷ்கா

  7. அனுஷ்கா

  நடிகை அனுஷ்காவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சைலன்ஸ் திரைப்படமும் சுமாரான விமர்சனத்தையே பெற்றது. நடிகர் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேடிசன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இந்த படத்தில் இருந்தாலும், வாய் பேச முடியாத பெண்ணாக தனது வித்தியாசமான நடிப்பில் மிரட்டி இருந்தார் அனுஷ்கா.

  6. ஜோதிகா

  6. ஜோதிகா

  இந்த ஆண்டு அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீசான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். வித்தியாசமான கோர்ட் டிராமாவாக உருவான இந்த படத்தில், வக்கீலாக நடித்து தனது ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிக் கொண்டு வந்திருந்தார் ஜோதிகா. அந்த பிளாஷ்பேக் காட்சிகளில் டோட்டலாக வேறு ஒரு ஜோதிகாவை ரசிகர்கள் கண்டு வியந்தனர்.

  5. ரித்திகா சிங்

  5. ரித்திகா சிங்

  இந்த ஆண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஓ மை கடவுளே படத்தின் நாயகி நம்ம நூடுல்ஸ் மண்டை ரித்திகா சிங் இந்த பட்டியலில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார். இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு ரித்திகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுத் தந்தது. தோழியாகவும், மனைவியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார்.

  4. ரிது வர்மா

  4. ரிது வர்மா

  பிளான் பண்ணி கொள்ளையடிக்கும் ஹைடெக் திருடர்களான துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷனிடம் லவ் பண்ணி கொள்ளையடித்த கில்லாடி பெண்ணாக இந்த ஆண்டு ரிது வர்மா வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கடைகாரரிடம் ஒரு ரூபாய்க்கு சண்டை போடும் காட்சியில் ஆரம்பித்து, கடைசியாக கெளதம் மேனனையே ஜெஸியாக ஏமாற்றியது வரை தரமான சம்பவம்.

  3. நயன்தாரா

  3. நயன்தாரா

  இந்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் மற்றும் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் என இந்த ஆண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக நயன்தாரா தான் திகழ்கிறார். மூக்கத்தி அம்மன் படத்தில் லேட்டஸ்ட் வெர்ஷன் அம்மனாக வந்து சாமிக்கு நடுவே சாமியார் எனும் மீடியேட்டர் தேவையில்லை என சரவெடியாய் வெடித்து இருந்தார்.

  2. அபர்ணா பாலமுரளி

  2. அபர்ணா பாலமுரளி

  படம் கோல்டன் குளோபுக்கே போகுற அளவுக்கு அவ்வளவு தரமா இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நேரத்தில் நேர்த்தியான படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இந்த படத்தில் மாறாவை மட்டுமின்றி, பொம்மியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். மனைவிக்கும் சுயமரியாதை, மோடிவேஷன் தேவை என்பதை அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு ஃபிரேமும் அழகாக பாடம் நடத்தி உள்ளது.

  1. ஐஸ்வர்யா ராஜேஷ்

  1. ஐஸ்வர்யா ராஜேஷ்

  காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிக்க ஸ்கோப் கிடைத்த படம் க/பெ. ரணசிங்கம். இறந்து போன கணவரின் உடலை வாங்க ஒரு பெண் எதுவரை போராட முடியுமோ? அதுவரை போராடியும் நிஜத்தில் நியாயம் கிடைக்காது என்கிற கதையில் ரணசிங்கத்தின் மனைவியாக வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த கடைசி வசன காட்சி நடிப்பின் உச்சம்.

  English summary
  Here we list out the Top 10 Tamil actress of 2020. Nayanthara, Ritu Varma, Aishwarya Rajesh and Abarna Balamurali are spotted in the top charts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X