தலீவர் முதல் சிஎஸ்கே வரை.. இந்த ஆண்டு ப்ளூ சட்டை மாறன் வச்சு செய்த பிரபலங்களின் குட்டி லிஸ்ட்!

சென்னை: பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் கடும் விமர்சகர் வெங்கடு என்கிற கேரக்டரில் விஜயகுமார் நடித்திருப்பார். பாட்டு பாடுறவங்க தப்பு பண்ணா வெளுத்து வாங்கிடுவாருன்னு, அதை விட கடுமையான விமர்சகராக ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா இயக்குநர்களையும் நடிகர்களையும் கடந்த சில ஆண்டுகளாகவே போட்டு பொளந்து எடுத்து வருகிறார்.

இயக்குநர்களை விட ஹீரோக்களை டார்கெட் செய்து அடிப்பதே இவரது ஹிட் ஃபார்மூலா. அதை பக்காவாக செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து சன் பிக்சர்ஸ் சொன்ன நிலையிலேயே வடை ஃபேக்டரி என ட்ரோல் செய்தவர். நடிகர் ரஜினிகாந்தை தலீவர் என்றும் சிவகார்த்திகேயனை சிஎஸ்கே - கிரிஞ்சு சிவகார்த்திகேயன் என்றும் கலாய்த்து ஏகப்பட்ட ட்ரோல் ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

From Rajinikanth to Sivakarthikeyan Blue Sattai Maran trolls many actors this 2023

காலில் விழுந்த தலீவர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட பல தியேட்டர்களில் நம்பர் ஒன் வசூல் அந்த படம் என்பதை அறிவித்து விட்டனர். அதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் லியோ படம் உள்ளது. சில தியேட்டர்களில் லியோ படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வசூலையும் வடை என ட்ரோல் செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன். ஆனால், அதற்கெல்லாம் சப்போர்ட் செய்யாத ரசிகர்கள் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியதை வைத்து பங்கமாக கலாய்த்து இருந்தார்.

பார்த்திபன் பஞ்சர்: கடந்த ஆண்டு வெளியான இரவின் நிழல் படத்தை பஞ்சராக்கிய ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பார்த்திபனை போட்டு ஃபுட்பால் ஆடி வந்தார். அந்த அளவுக்கு அவர் மீது என்ன முன் விரோதம் உள்ளது என்றே தெரியவில்லை. அடிக்கடி பார்த்திபனும் பந்தாடப்பட்டார்.

சிக்கிய சீனு ராமசாமி: "நீ மாமனிதன் இல்லை. இன்றுமுதல் மாமாமனிதன்." என்றும் 'சக்கரை' ராமசாமி.. திரையுலக நித்யானந்தாவாம். தோலை உரிச்சிட வேண்டியதுதான்." என்றும் ப்ளூ சட்டை மாறன் நடிகை மனிஷா யாதவிடம் சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் படத்தின் போது இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடந்துக் கொண்டார் என வெளுத்திருந்தார்.

சிவகார்த்திகேயனை சீண்டி: டி. இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். இனிமேல் அவருடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க முடியாது என பேசி அதிர்ச்சியளித்தார். டி. இமான் தனது முதல் மனைவியை பிரிய காரணமே தம்பி என நினைத்து சிவகார்த்திகேயனை வீட்டில் விட்டது என தொடர்ந்து மற்ற பிரச்சனைகள் வந்தாலும் தெளிய வச்சு தெளிய வச்சு அடித்தார்.

வசமா மாட்டிய வடிவேலு: கடைசியா கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்தாமல் வடிவேலு பண்ண வேலைக்கு தற்போது தொடர்ந்து விளாசி வருகிறார். வடிவேலு பற்றி தியாகு, பொன்னம்பலம் என யார் பேட்டிக் கொடுத்தாலும் அந்த பேட்டிகளின் ஸ்க்ரீன் ஷாட்டை போட்டு மாமன்னனை மரண கலாய் கலாய்த்து வருகிறார்.

சூர்யா மற்றும் கார்த்தி: இயக்குநர் அமீரின் பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யா மற்றும் கார்த்தியை வெளுத்த ப்ளூ சட்டை மாறன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாமல் ஓடுகிற காரில் மரியாதையே இல்லாமல் சூர்யா பேசுவது சரியா என்றும் கார்த்தி, விஷால், சிம்பு, தனுஷ் எல்லாம் நியூ இயர் கொண்டாடி முடித்து விட்டு சாவகாசமா வந்து அஞ்சலி செலுத்துங்க என்றும் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் இந்த ஆண்டு சிதைத்து விட்டார் ப்ளூ சட்டை மாறன். அடுத்த ஆண்டு பல பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், செம வேட்டை காத்திருக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X