நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் எங்கே ஓட்டுப் போட போறாங்க தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சினிமா பிரபலங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் விபரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேதி தேர்தல் நடைபெறவுள்ளது..
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச் சாவடியில் நாளை காலை வாக்களிக்க உள்ளார். எப்போதுமே முதல் நபராக வாக்களித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நாளையும் வாக்குப் பதிவு ஆரம்பம் ஆன உடனே தனது வாக்கை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்
நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் சைக்கிளில் சென்று நடிகர் விஜய் ஓட்டுப் போட வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், இந்த முறை எப்படி வந்து விஜய் வாக்கு செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அஜித்
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்தை நேரில் பார்க்கும் ஆசையில் முண்டியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்துடன் சூர்யா
நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் திநகரில் உள்ள இந்தி பிரச்சார சபா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலையிலேயே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்புவும் திநகரில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்த வருவார் என தெரிகிறது.
Recommended Video

மற்ற பிரபலங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளி. நடிகர் விஜய் சேதுபதி - சென்னை நடுநிலை பள்ளி, காமராஜ் காலனி கோடம்பாக்கம். தனுஷ், ஜெயம் ரவி, அனிருத் மற்றும் திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க உள்ளனர். நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தி.நகர், டக்கர் பாபா வித்யாலயா. நடிகர் சத்யராஜ் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நுங்கம்பாக்கம். கவுதம் கார்த்திக் - ஸ்டெல்லா மேரீஸ்.


Click it and Unblock the Notifications











