GOTனா சும்மாவா? A Knight of the Seven Kingdoms-இல் சர் டங்கனாக நடித்துள்ளவர் யார் தெரியுமா?
சென்னை: உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களில் அதுவும் வெப் சீரிஸ் ரசிகர்களில் பலருக்கும் பிடித்த வெப் சீரிஸ் என்றால் அது GOT என்றோ கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ் தான். மற்ற வெப் சீரிஸ்கள் எதனுடனும் இதை போட்டிக்கு களமிறக்கினாலும் பந்தயம் ஜெயிக்கும் வெப் சீரிஸ் இது. GOT தான் அதன் தொடர்களிலேயே கடைசி என்றாலும், அதற்கு முந்தைய அத்தியாயங்கள் மீதும் ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு. இதில் ஒரு அத்தியாயம் தான் தற்போது ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கும் A Knight of the Seven Kingdoms.
A Knight of the Seven Kingdoms அறிவிக்கப்பட்ட போதே அதன் மீது தனி ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இதன் முதல் சீசனில் மொத்தமாகவே 6 எபிசோடுகள் தான் என்று ஏற்கனவே குழுவினர் அறிவித்துவிட்டனர். இப்படி இருக்கையில் இதுவரை நான்கு எபிசோடுகள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவிட்டது. ஐந்தாவது எபிசோட்குக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நான்காவது எபிசோட்டான செவன் என்ற எபிசோடின் முடிவும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பின்னணி இசையும் தான்.
சரி இந்த சீசனில் சர் டங்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர், பீட்டர் கிளாஃபி. இவர் கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள கால்வே கவுண்டியில் பிறந்தார். அடிப்படையில் இவர் ரக்பி வீரர். அயர்லாந்து அணிக்காக 20 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி விளையாட்டில் விளையாடி உள்ளார். தனது பள்ளிக் காலத்தில் இருந்தே அவர் ரக்பி விளையாடி வந்துள்ளார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்: ஒரு ரக்பி வீரரை எப்படி சர் டங்கன் என்ற மையக் கதாபாத்திரமாக நடிக்க தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்த அனைவரும் அந்த சீரீஸ் பார்க்கும் போது டங்கன் குறித்து ஓரளவுக்கு கவனித்திருக்கலாம். ஆனால் A Knight of the Seven Kingdoms சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியதில் இருந்து கேம் ஆஃப் த்ரோன்ஸில் எங்கெல்லாம் சர் டங்கன் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை ரசிகர்கள் வெட்டி வெட்டி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
சர் டங்கன்: சர் டங்கன் கதாபாத்திரம் அடிப்படையில் மிகவும் உயரமான கதாபாத்திரம். அவர் 7 அடி உயரம் என்று ஆர்.ஆர். மார்ட்டின் தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது அவரது கதாபாத்திரத்தை உருவத்திலும் நடிப்பிலும் ஈடு செய்ய பீட்டர் கிளாஃபியை தேர்வு செய்துள்ளனர். பீட்டரின் உயரம் 6 அடி 5 அங்குலம். அதாவது கிட்டத்தட்ட 6 அடி. ரக்பி விளையாடிய கால கட்டத்தில் 119 கிலோ எடையும் இருந்துள்ளார். இவர் டங்கன் கதாபாத்திரத்தை போலவே உயரமாகவும் ஒரு வீரனைப் போன்ற தோற்றத்தோடும், மிகவும் மென்மையான மனம் கொண்டவராகவும் இருந்துள்ளார். சுமார் 500 பேரை ஆடிஷன் செய்ததில் இவரைத் தேர்வு செய்துள்ளனர்.

ரக்பி டூ சினிமா: இவர் ரக்பி வீரர் என்றாலும் 2019ஆம் ஆண்டு ரக்பியை கைவிட்ட பின்னர் முறையாக நடிப்பைக் கற்றுக் கொண்டார். அதாவது, அயர்லாந்தில் உள்ள போ ஸ்ட்ரீட் அகாடமியில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றார். 2022ஆம் ஆண்டில் இருந்து தான் நடிக்கத் தொடங்கினார். அந்த ஆண்டு ஹாரி வைல்ட் என்ற வெப் சீரிஸ் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் பேட் சிஸ்டர்ஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2வில் நடித்தார். இரண்டிலும் இருவேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அதன் பின்னர் ரெக் மற்றும் வைக்கிங்ஸ்: வால்ஹாலா என்ற இருவேறு தொடர்களில் நடித்து தனது திறமையை வெளி படுத்திக் கொண்டே இருந்தார்.
உயரம்: இவரது குணம், உயரம், எடை மற்றும் நடிப்புத் திறமை என அனைத்துமே இவருக்கு A Knight of the Seven Kingdoms என்ற உலகம் முழுவதும் ரசிகர்கள் கவனிக்கும் வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. A Knight of the Seven Kingdoms வெப் சீரிஸில் சர் டங்கன் கதாபாத்திரத்தை மிகவும் உயிரோட்டமாகவும் யதார்த்தமாகவும் கையாண்டு வருகிறார். ரக்பி வீரராக இருந்து உலகமே கவனிக்கும் வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது அவரது உயரம் தான். ஆனால் அவரது பள்ளிக் காலத்தில் அவரது உயரத்தை பார்த்து சக மாணவர்கள் தொடங்கி பள்ளியில் பலரும் கிண்டலடித்துள்ளனர் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எந்த உயரத்தை வைத்து பலரும் அவரை கிண்டலடித்தார்களோ, அதே உயரம் தான் அவருக்கு உலகம் புகழ்பெற்ற வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











