ஒன் அன்ட் ஒன்லி நயன்தாரா.. சமந்தா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்!
சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
டயானா குரியன் ஆக திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார்.
மாடலிங் துறையில் இருந்த விருப்பத்தால் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

36வது பிறந்தநாள்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நடிகை நயன்தாரா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரபலங்கள் வாழ்த்து
இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDNayanthara என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது.

நடிகை சமந்தா
இந்நிலையில் நடிகை சமந்தா பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒன் அன்ட் ஒன்லி நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பிரகாசமாகவும் அதிக பிரகாசமாகவும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள், நம்முடையதுக்காக போராட எங்களுக்கு ஊக்கமளிக்கவும் .உங்களுக்கு அதிக சக்தி கிடைக்க வேண்டும்.. உங்கள் பலத்திற்கும் அமைதியான உறுதிக்கும் வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

நடிகை அம்ரிதா
நடிகை அம்ரிதா அய்யர் பதிவிட்டுள்ள டிவிட்டில், லேடி சூப்பர் மேடத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. மற்றும் அம்ரிதாவின் ரசிகர்கள் சார்பிலும் என பதிவிட்டுள்ளார். மேலும் நயன்தாராவுடன் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

அஜய் ஞானமுத்து..
இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிவிட்டுள்ள டிவிட்டில், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேம்.. மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் கொண்ட ஆண்டாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று பிறந்த நாள் காணும் நயன்தாராவிற்கு இனிய வாழ்த்துக்கள் !! என தெரிவித்துள்ளார்.

வெற்றி கிடைக்க வாழ்த்து
இதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா மேம்! நீங்கள் உண்மையிலேயே பிரகாசமான நட்சத்திரத்தைப் போல தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும்! உங்களுக்கு அதிக வெற்றி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்..


Click it and Unblock the Notifications











