ட்ரில் மாஸ்டர் தெரியுமா.. அதுதான் சுதா.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் புது மேக்கிங் வீடியோ!

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூரரைப் போற்று படம் ரிலீசாக உள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் விமான கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

ஏர் டெக்கான் ஓனர் கதை

ஏர் டெக்கான் ஓனர் கதை

சாதாரண குடும்பத்தை சேர்ந்த கோபிநாத், விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஏர் டெக்கான் எனும் விமான நிறுவனத்தையே உருவாக்கிய கதையால் மிகவும் ஈர்க்கப்பட்ட இயக்குநர் சுதா கொங்கரா, அவரது வாழ்க்கை வரலாறு கதைக்கான ரைட்ஸ் வாங்கி, அதில் சினிமா அம்சங்களை சேர்த்து சூரரைப் போற்று எனும் படத்தை உருவாக்கி உள்ளார்.

புது எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்

புது எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்

நிச்சயம் சூரரைப் போற்று படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஊர்க்குருவி பருந்தாகாது எனும் பழமொழியை மாற்றி, உறுதியோடு பறந்தால், ஊர்க்குருவி பருந்தை விட உயரமாக பறக்க முடியும் என்கிற அழுத்தமான கதையைத் தான் சுதா இயக்கி உள்ளார்.

மேக்கிங் வீடியோ

ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படம் சம்மரில் வெளியாகும் என்கிற நிலையில், வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு, மீண்டும் சூர்யா, அதே போல கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காரே என வியந்தனர். இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய மேக்கிங் வீடியோவை 2டி நிறுவனம் யூடியூபில் வெளியிட்டு இருக்கிறது.

ஸ்க்ரிப்ட் படிக்கச் சொல்லி

ஸ்க்ரிப்ட் படிக்கச் சொல்லி

மேலும், இதுவரை சூர்யாவிடம் எந்த இயக்குநர்களும் சொல்லாத அளவுக்கு முதன் முதலாக சுதா கொங்கரா, ஸ்க்ரிப்ட் பேப்பர்களை சக நடிகர்களுடன் சேர்ந்து கொண்டு படிக்கும் பிராக்டிஸ் செய்ய சொல்லி உள்ளதையும் இந்த மேக்கிங் வீடியோவில் வெளியிட்டுள்ளனர். வசனங்களை சக நடிகர்களுடன் படித்து பழகும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த கதாபாத்திரமாகவே வாழ உதவியாய் இருந்தது என்றார்.

ட்ரில் மாஸ்டர்

ட்ரில் மாஸ்டர்

சூர்யாவே பர்ஃபெக்‌ஷன் பார்க்கும் ஆள், ஆனால், சுதா கொங்கரா அதை விட தீவிரமானவர் என சூர்யாவே சொல்லி உள்ளார். அவர் ஒரு ட்ரில் மாஸ்டரை போல, நான் நடிச்ச படங்கள் எல்லாத்தையும் பார்த்து விட்டு, ரிப்பீட்டடா செய்யும் சில விஷயங்களை லிஸ்ட் போட்டுக் கொடுத்துட்டாங்க, இதையெல்லாம் இந்த படத்துல பண்ணக் கூடாது என சூர்யா சொல்லி சிரிக்கும் போதே, இந்த படம் இறுதிச்சுற்று படத்தை விட அடுத்த லெவலில் இருக்கும் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X