twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாத்திகம் பேசும் படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிட்டவர்.. கருணாநிதியை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

    |

    சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    Recommended Video

    கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்

    தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

    ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை

    சினிமா உலகிற்கு இவர் ஆற்றிய தொண்டு எண்ணில் அடங்காதவை. இந்த பராசக்தி நாயகனை சினிமா உலகம் இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து வருவதை பார்ப்போம்

    பராசக்தி நாயகன்

    பராசக்தி நாயகன்

    ஆகச் சிறந்த கலைஞர் என்பதாலே தமிழ் சினிமா உலகம் கருணாநிதியை 'கலைஞர்' என்றே அழைத்து வருகிறது. பராசக்தி படத்தில் இவர் எழுதிய வசனங்களும், அதற்கு நடிப்பால் உயிர் கொடுத்த சிவாஜி கணேசனும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக என்றுமே இருப்பார்கள். கண்ணகி, மனோகரா என காவிய தெய்வங்களை தனது வசனத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்தவர் இந்த பராசக்தி நாயகன்.

    எனது ஆசான்

    எனது ஆசான்

    "நாத்திகம் பேசும் படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்... படங்களுக்கு தலைப்பு சூட்டுவதில் எனக்கு அவரே ஆசான். அன்பு பிறந்த நாள்.. வாழ்த்துகள் அய்யா" என நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சீனுராமசாமி வாழ்த்தி உள்ளார்.

    சமூக நீதிக்கான தில்லு

    சமூக நீதிக்கான தில்லு

    "என் தந்தையின் 29ஆம் நினைவுநாள் இன்று. எங்க ஊருல எங்கப்பாவ எல்லாருமே MGRநுதான் கூப்டுவாங்களாம். ஆனா MGRஆ கலைஞரானு வந்தப்ப, ரசனை வேற கொள்கை வேறனு கலைஞர் பக்கம் நின்னவர். அப்பா சாகும்வரை ஒரு #DravidianStock-ஆ இருந்ததுக்கு காரணம் கலைஞரின் சமூகநீதிக்கான தில்லு" என மூடர்கூடம் இயக்குநர் நவீன் பதிவிட்டுள்ளார்.

    அண்ணா நூற்றாண்டு நூலகம்

    அண்ணா நூற்றாண்டு நூலகம்

    மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகாவுக்கு இந்த நாள் மிகப்பெரிய நாளாக இருக்கும். கருணாநிதி செய்த பல சிறப்பான விஷயங்களில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றால் அது அண்ணா நூற்றாண்டு நூலகம் தான் என கஸ்தூரி கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    From Director Seenu Ramasamy to Kasthuri remembers Karunanidhi on his birth anniversary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X