ஷிவானி முதல் ஜித்தன் ரமேஷ் வரை.. ஆஜீத் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் மட்டுமல்ல வெளியிலும் அனைவரும் ஒரே அன்பு கேங்காகத்தான் சுற்றி வருகின்றனர்.
பிக் பாஸ் போட்டியாளர் ஆஜீத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் அர்ச்சனா, ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட ஏகப்பட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதன் புகைப்படங்களை ஆஜீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஆஜீத் பிறந்தநாள்
சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் என கலக்கிய ஆஜீத் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதிகம் பேசாமல், பாடி அசத்திய ஆஜீத் அனைத்து போட்டியாளர்களுக்கும் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். நேற்று அவரது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஒரே ரீயூனியன் தான்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த சீசன் போட்டியாளர்கள் ஏகப்பட்ட பர்த் டே பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் ரீயூனியன் செய்து கலக்கி வருகின்றனர். பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள், ஷிவானியின் செல்ல நாய்க்குட்டி பர்த் டே, சோமசேகர் பிறந்தநாள், ரியோ ராஜ் மகளின் ஃபர்ஸ்ட் பர்த்டே என ஒரே கொண்டாட்டம் தான்.

பர்த் டே பார்ட்டி
இந்நிலையில், நேற்று ஆஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் ஒன்று கூடி பர்த் டே பார்ட்டியை களைகட்டினர். அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், வேல் முருகன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், கேபி, ரேகா, ரம்யா பாண்டியன் அக்கா என ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டனர்.

என் குடும்பம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் அன்பு என்கிற வார்த்தையே அர்ச்சனாவால் மிகவும் கலாய்க்கப்பட்டது. ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் தான் நிகழ்ச்சிக்கு பின்பும் ஒரு குடும்பமாகவே உள்ளனர். இதை என் குடும்பம் என்கிறேன் என இந்த போட்டோக்களை ஷேர் செய்து ஆஜீத்தும் கேப்ஷன் போட்டுள்ளது பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

மிஸ் யூ ரம்யா அக்கா
ஆஜீத் பிறந்த நாளை முன்னிட்டு ஆரி அர்ஜுனன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் ரம்யா பாண்டியன் இந்த பர்த் டே பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக ரம்யா பாண்டியனின் அக்கா கலந்து கொண்டார். பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை ஷேர் செய்த ஆஜீத் மிஸ் யூ ரம்யா பாண்டியன் அக்கா என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











