twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷோபா முதல் தீபா வரை..வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகைகளின் சோக கதை

    |

    சென்னை: சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே தற்கொலை செய்துக்கொண்ட நடிகைகள் அந்த காலம் முதல் இன்றுவரை இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகை ஷோபா தொடங்கி தீபா வரை பட்டியல் நீளுகிறது.

    வாழ்க்கையில் பணம், வசதி மட்டும் நிம்மதியை தராது, நிம்மதி நாம் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது.

    சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்கள் கூட போராடி வாழும்போது அனைத்து வசதிகளும் உள்ளவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகைகள் அன்றும் உண்டு இன்றும் உண்டு.

    நடிகை தீபா தற்கொலைக்கு முன் காதலனுடன் சண்டை..விசாரணையில் சிக்கிய காதலனுக்கு போலீஸ் சம்மன்!நடிகை தீபா தற்கொலைக்கு முன் காதலனுடன் சண்டை..விசாரணையில் சிக்கிய காதலனுக்கு போலீஸ் சம்மன்!

    தற்கொலை மூலம் அதிர்ச்சி ஏற்படுத்திய நடிகை ஷோபா

    தற்கொலை மூலம் அதிர்ச்சி ஏற்படுத்திய நடிகை ஷோபா

    பிரபல நடிகைகள் தற்கொலை செய்ததில் தமிழகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது நடிகை ஷோபாவின் தற்கொலை தான். தமிழில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் சில படங்களிலேயே பெயர் வாங்கினார். பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுடன் நடித்து புகழ்பெற்ற ஷோபா தொடர்ந்து ரஜினியுடன் முள்ளும் மலரும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்த அதே ஆண்டில் பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஏணிப்படிகள் படம் சிவகுமாருடன் நடித்தார். அதே ஆண்டில் அவர் நடித்த பசி படம் அவருக்கு பெரிதும் பெயர் வாங்கிக்கொடுத்தது. ஷோபாவுக்கு தேசிய விருதையும் பெற்றார்.

    ஃபடாபட் கேரக்டர் தைரியம் மனதில் இல்லையே சுப்புலட்சுமி ஃபடாபட் கேரக்டர் தைரியம் மனதில் இல்லையே சுப்புலட்சுமி

    ஃபடாபட் கேரக்டர் தைரியம் மனதில் இல்லையே சுப்புலட்சுமி ஃபடாபட் கேரக்டர் தைரியம் மனதில் இல்லையே சுப்புலட்சுமி

    உச்ச நடிகையாக இருக்கும் போதே, சிறிய வயதில் தன்னை வைத்து படம் எடுத்த பாலுமகேந்திராவை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் 1980 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். திரையுலகில் வளர்ந்துவந்த நடிகையின் தற்கொலை பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அதே ஆண்டில் மற்றொரு பிரபல் நடிகையும், ஷோபாவுடன் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவருமான படாபட் ஜெயலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டார். எம்ஜிஆர் அண்ணன் மகன் காதல் முறிவே தற்கொலைக்கு காரணம் எனக் கூறப்பட்டது. ஃபடாபட் என துணிச்சலாக அடி என்னடி உலகம் பாடியவர் நிஜ வாழ்வில் தைரிமில்லாமல் முடிவெடுத்தார்.

    ஒரு தங்க ரதத்தில் ரஜினி பாராட்டிய நடிகையின் சோக முடிவு

    ஒரு தங்க ரதத்தில் ரஜினி பாராட்டிய நடிகையின் சோக முடிவு

    இதன் பின்னர் ரஜினிக்கு தங்கையாக தர்மயுத்தம், பைரவி படங்களில் நடித்த மற்றொரு பிரபல நடிகை லட்சுமி ஸ்ரீ திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். ஒரே ஆண்டில் மூன்று நடிகைகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டனர். இதில் ஆண்களுடன் கொண்ட காதல் அல்லது வேறு சில பிரச்சினைகள் காரணமாக தற்கொலை அமைந்தது. எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வசதியாக வாழ்ந்தவர்கள், புகழ்பெற்ற நடிகைகள் ஆனால் காதல் தோல்வி, திருமண வாழ்வில் பிரச்சினை அவசரப்பட்டு வாழக்கையை முடித்துக்கொண்டார்கள்.

    சில்க் சுமிதாவின் சோக முடிவு

    சில்க் சுமிதாவின் சோக முடிவு

    தமிழ் திரையுலகில் ஷோபா தற்கொலைக்கு பின் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய தற்கொலை நடிகை சில்க் சுமிதாவின் தற்கொலை. 1996 ஆம் ஆண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். நடிகை சில்க் சுமிதா 456 படங்களில் நடித்திருந்தார். புகழேனியின் உச்சியில் இருந்தார். அவருக்கான ரசிகர்கள் தென் இந்தியா முழுவதும் இருந்தனர். ஆனால் அவர் ஒரு தாடிக்காரருடன் நட்பில் இருந்தார். கடைசியில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை என்று தகவல் வெளியானது.

    விஜியின் விபரீத முடிவு

    விஜியின் விபரீத முடிவு

    அடுத்து தமிழ் திரையுலகை பாதித்த தற்கொலை கோழிக்கூவுது விஜியின் தற்கொலை. விஜயகாந்திற்கு திருப்புமுனையாக அமைந்த சாட்சி பட கதாநாயகி அவர். கராத்தே கற்றவர். விஜயகாந்துடன் சிம்மாசனம், விசுவின் டௌரி கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இடையில் உடல் நலப்பிரச்சினையில் முதுகுத்தண்டில் ஆபரேஷன் நடந்தது. ஒருவரை விரும்பி அது பிரச்சினை ஆனது. பின்னர் பஞ்சாயத்து எல்லாம் நடந்தும் முடியாத நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.

    ப்ரத்யூக்‌ஷா..புன்னகை மன்னன் பாணியில் காதலி மரணம்

    ப்ரத்யூக்‌ஷா..புன்னகை மன்னன் பாணியில் காதலி மரணம்

    விஜயகாந்துடன் தவசி படத்தில் நடித்த பிரத்யூக்‌ஷா தமிழ் படங்களில் திடீரென பிரபலம் ஆனார். விஜயகாந்தில் அடுத்த படமான சிம்மாசனம் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது. சத்யராஜுடன் சவுண்ட் பார்ட்டி படத்தில் நடித்து முடித்திருந்தார். அவருக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும் தெலங்கானாவில் உள்ள செல்வந்தர்கள் குடியிருப்பில் இருவரும் தற்கொலைக்கு முயன்றதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரத்யூக்‌ஷா உயிரிழந்தார். காதலன் சித்தார்த் பிழைத்துக்கொண்டார். ஆனால் அந்த மரணத்தில் பல மர்மங்கள் இருந்த நிலையில் காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிம்ரன் தங்கை மோனலின் வேகமான முடிவு

    சிம்ரன் தங்கை மோனலின் வேகமான முடிவு

    அடுத்து தற்கொலை செய்துக்கொண்ட பிரபல கதாநாயகிகள் சிம்ரனின் தங்கை மோனல், பிரபல நடிகையாக வலம் வந்தார். இவரது அறிமுகமே நடிகர் விஜய் நடித்த பத்ரி படம். பின்னர் சமுத்திரம், பேசாத கண்ணும் பேசுமே படம் குணாலுடன் இணைந்து நடித்தார் (குணால் பின்னர் தற்கொலை செய்துக்கொண்டார்) பின்னர் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் படத்தில் நடித்தார். தனது அடுத்த படமான கன்னட பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர் வீடு திரும்பியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு உடன் பழைய நடன இயக்குநர் காரணம் என சிம்ரன் பின்னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

    English summary
    Actresses who committed suicide when they were popular in cinema have been committing suicide ever since. The list goes on from actress Shoba to Deepa. Money and comfort alone don't bring peace in life, peace lies in how we perceive a thing. Even people who have no means of food are struggling to survive and those who have all the comforts end their lives unable to face the problems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X