தல அஜித்தை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம்...அந்த 5 விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

சென்னை : நடிப்பு மட்டுமல்ல அதைத் தாண்டியும் தல அஜித்தை பலருக்கும் பிடிக்கும். சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் என்றால், சினிமாவிற்கு வெளியே அவரின் செயல்பாடுகள் பலரையும் கவர்ந்துள்ளன. இதற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

நடிப்பு தவிர மேலும் பல விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவர் அஜித். ஆர்வத்துடன் அந்த துறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்ளும் சுபாவம் கொண்டவர். அது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்துள்ள விஷயம்.

பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், போட்டோஃகிராபி, சமையல் போன்ற விஷயங்களை அஜித்திற்கு தீராத தாகம் உண்டு. தனது அடுத்த படங்களுடன், துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார். அஜித் ரசிகர்களை கவர்ந்த அந்த 5 விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதல்

அடுத்தபடியாக தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக தன்னை தயார் படுத்தி வருகிறார் அஜித். 2019 ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அஜித், இரு பிரிவுகளில் முறையே 9 மற்றும் 12 வது ரேங்க்கை பெற்றார். தற்போது சென்னையில் அடுத்த லெவல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வருகிறார்.

தீவிர பைக் ரேசர்

தீவிர பைக் ரேசர்

அஜித் பைக் ரேசிங்கில் தீராத தாகம் தொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது பைக் ஓட்டும் காட்சிகளை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பாதுகாப்பாக பைக் ஒட்டுவதற்கான தூதராகவும் அஜித் இருந்து வருகிறார். வீரம் பட சூட்டிங்கின் போது அஜித்துடன் புனேவில் இருந்து சென்னை வரை பைக்கில் வந்தது பற்றி நடிகர் சுஹைல் சந்தோக் சமூக வலைதளத்தில் எழுதி இருந்தார். சமீபத்தில் சென்னை - அயோத்தி இடையேயான 10,000 கி.மீ., பயணத்தையும் அஜித் மேற்கொண்டுள்ளார். ஐதராபாத், வாரணாசி, லக்னோ வழியாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 ஏரோ மாடலிங்

ஏரோ மாடலிங்

ஏரோ மாடலிங்கிலும் அஜித் கவனம் செலுத்த துவங்கியுள்ளார், ரசிகர்கள் இடையே அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று பல பயிற்சிகளையும் அஜித் மேற்கொண்டுள்ளார். அஜித்தால் பல இளைஞர்கள் மனதில் ஏரோ மாடலிங் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த துறை சார்ந்த மாணவர்கள் பலரின் சோதனைகளுக்கும் அஜித் உதவி வருகிறார்.

போட்டோகிராபி

போட்டோகிராபி

அஜித்திற்கு பல ஆண்டுகளாக இருக்கும் ஆர்வங்களில் போட்டோகிராபியும் ஒன்று. 2001 ம் ஆண்டு தீனா படத்தில் நடித்த போது ஒளிப்பதிவாளர் அரவிந்த் பரிசாக அளித்த கேமிராவைக் கொண்டு பல போட்டோக்களை அஜித் எடுத்துள்ளார். இயற்கை காட்சிகளை மட்டுமல்ல தன் உடன் பணியாற்றிய ஸ்ருதிஹாசன், பார்வதி நாயர், கபீர் துகன் சிங் உள்ளிட்டோரையும் அஜித் போட்டோ எடுத்துள்ளார்.

சமையல்

சமையல்

அஜித்தின் நடிப்பிற்கு எப்படி பலர் ரசிகராக உள்ளனரோ அதே போன்று அவர் செய்யும் பிரியாணிக்கும், உடன் நடித்த பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர். அஜித் சமையல் செய்யும் போட்டோக்களை பல நடிகர்கள் பகிர்ந்துள்ளனர். வேதாளம் படத்தில் நடித்த ராகுல் தேவ் தனது பேட்டியில் கூறுகையில், நான் வட இந்தியாவை சேர்ந்தவன் என்பதால் எங்கள் பிரியாணி பற்றி னெக்கு தெரியும். ஆனால் அஜித் செய்த பிரியாணி வேற லெவல். காரசாரமான, சுவையான பிரியாணி அது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X