சிவகார்த்திகேயன் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. RRR பற்றி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

சென்னை: ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் அசுரத்தனமான நடிப்பு மற்றும் இயக்குநர் ராஜமெளலியின் மிரட்டலான திரைக்கதையில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படம் இப்பவே பிளாக்பஸ்டர் என ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

கோலிவுட் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை இந்தியாவின் பெருமைமிகு படைப்பாகவே இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த சமுத்திரகனி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஒட்டுமொத்த RRR படகுழுவினருக்கே தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தரன் ஆதர்ஷ் விமர்சனம்

தரன் ஆதர்ஷ் விமர்சனம்

பிரபல பாலிவுட் சினிமா டிராக்கர் மற்றும் விமர்சகரான தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் TEFRRIFIC எனப் போட்டு படத்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்திருக்கிறார். சுதந்திர உணர்வை இவ்வளவு பெரிய படமாக கொடுக்க ராஜமெளலியால் மட்டுமே முடியும் என பாராட்டி உள்ளார்.

சந்தோஷத்தில் சமுத்திரகனி

சந்தோஷத்தில் சமுத்திரகனி

பாகுபலி படத்தில் கட்டப்பாவாக சத்யராஜ் நடித்து அசத்திய நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு அறிவுரை வழங்கும் காவல் அதிகாரியாக சமுத்திரகனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இன்று முதல் என தனது வெல்வோம் எமோஜி சிம்பளையும் போட்டு அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் டிராமாவை தியேட்டரில் பார்க்க தயாராகுங்கள் என ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள அஜய்தேவ்கன் ட்வீட் போட்ட உடனே பாலிவுட் ரசிகர்கள் எல்லாம் படையெடுத்துக் கொண்டு வந்த கமெண்ட் பக்கத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி விட்டோம் என கமெண்ட் செய்து வருகின்றனர். அஜய் தேவ்கனுக்கு மனைவியாக ஸ்ரேயா இந்த படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

Magnanimous ஆர்ஆர்ஆர் படத்தை பெரிய திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கமல்ஹாசனின் விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட்டுள்ளார். மேலும், பல பிரபலங்களும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X