இந்தா வெச்சுக்கோ முதல் உச்ச கட்ட ஆத்திரம் வரை.. சென்னையை கலக்கிய விஜய்யின் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஏப்ரல் 20 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கிய அவரது ரோட் ஷோ பிரசாரம், சென்னை மாவட்டம் வரை நீண்டது.

இவரை காண அவரை ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர். இதனால் அவர் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வருவது போல் தான் இருந்தது. இப்படி இருக்கையில் இந்த ரோட் ஷோவில் சில ஸ்பெஷல் மொமெண்ட்ஸ் மற்றும் பலரது கவனத்தை ஈர்த்த சில சம்பவங்கள் நடைபெற்றது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விஜய் இதுக்கு முன்னர் சென்னையில் இரண்டு முறை பிரசாரம் செய்தார். அந்த இரண்டு முறையும் மக்களிடத்தில் வாக்கு கேட்ட பேசினார். ஆனால் இம்முறை சென்னையில் இருக்கக்கூடிய பல தொகுதிகளை அவர் கவர் செய்ய வேண்டி இருந்ததால், மைக்கில் பேசாமல் வெறுமனே ரோட் ஷோ மட்டும் நடத்தினார்.

From Take My Heart to Intense Anger Memorable Moments of Vijay s Massive Chennai Roadshow

இதில் விஜய் தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி தனது இதயத்தை பிச்சு கொடுப்பது போல் செய்கையே செய்து அவர்களை கவர்ந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் இந்த வச்சுக்கோ மொமென்டில் விஜய் இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல் சில ரசிகர்கள் விஜய்க்கு கால் பந்தை பரிசளிக்க அவரை நோக்கி கால்பந்து வீசினர். மேலும் சிலர் அவருக்கு இனிப்பு காரம் என சில தின்பண்டங்களையும் வீசினர். ஒருமுறை வண்டியின் மேல் நின்று ரசிகர்களை பார்த்து வந்த விஜய் வண்டிக்கு உள்ளே இறங்க முயற்சித்த போது தவறி விழ போனார். நல்வாய்ப்பாக அவரை அவரது பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டனர்.

அதேபோல் வில்லிவாக்கம் பகுதியில் அவர் ரோட் ஷோ நடத்திக் கொண்டிருப்பதில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கத்தினால் யாரோ ஒருவர் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்திருப்பார் போல, அதை பார்த்ததும் விஜய் உச்சகட்ட கோபத்தில் ரசிகர்களை நகரச் சொல்லி கத்தினார், இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

From Take My Heart to Intense Anger Memorable Moments of Vijay s Massive Chennai Roadshow

விஜய் சென்னையில் நடத்திய ரோட் ஷோவில், வில்லிவாக்கம், தி நகர், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் முடிவுக்கு வருவதால், விஜய் தரப்பிலிருந்து ஏதாவது வீடியோ வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் ஏற்கனவே விஜய் பல மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் நடத்தவில்லை இப்படி இருக்கையில் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜய் பிரசார வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X