பிரஷாந்த்தின் ஷாப்பிங் மால் "ஹவுஸ் ஓனர்" செந்தில் சூரியோட "கிளப் கடை" டாப் 12 ஸ்டார் தொழிலதிபர்கள்!

சென்னை : மற்ற மொழி சினிமாக்களில் இருப்பதை விட தமிழ் திரைப்பட பிரபலங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் மிக அதிகம். பலர் சினிமாவில் மட்டுமல்ல, சினிமாவை தாண்டி மற்ற துறைகளிலும் டாப் இடத்தில் இருந்து வருகின்றனர்.

Recommended Video

Prasanth விளக்கம்! MK Stalin-ஐ சந்தித்தது ஏன்? | Oneindia Tamil

தமிழ் நடிகர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் சிலர் சினிமா தொடர்பில்லாத தொழில்களிலும் தடம் பதித்து, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இதில் டாப் லிஸ்டில் இருக்கும் சில நடிகர்களையும், அவர் செய்யும் தொழில்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பிரஷாந்த்

பிரஷாந்த்

பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தியாவின் மிகப் பெரிய ஜுவல்லரி மாலான பிரஷாந்த் ரியல் கோல்ட் டவர் என்ற பெயரில் சென்னையில் நடத்தி வருகிறார்.

நிழல்கள் ரவி

நிழல்கள் ரவி

குணசித்திர நடிகர், டப்பிங் கலைஞரான நிழல்கள் ரவி தற்போதும் பல படங்கள், டிவி விளம்பரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அனிபிக்ஸ் அனிமேஷன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தொழில்நுட்ப உருவாக்கம் சார்ந்த கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆர்யா

ஆர்யா

கோலிவுட்டின் ஹேண்ட்சம் ஹீரோவான ஆர்யா, தென்னிந்தியாவில் Sea Shell என்ற பெயரில் பல ரெஸ்டாரென்ட்களை நடத்தி வருகிறார். சென்னை மற்றும் வெளிநாடுகளில் இதன் கிளை உள்ளது.

சமந்தா

சமந்தா

டாப் நடிகையும் சென்னை பெண்ணுமான சமந்தா, திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் இருக்கிறார். இவர் Saaki என்ற பெயரில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையிலான ஃபேஷன் பிராண்ட் ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

தென்னிந்திய மொழிகளில் பிஸியான மிக திறமையான நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி, Life of Pie என்ற பெயரில் பேக்கரி தொழிலை நடத்தி வருகிறார். இதில் ஆர்டர் செய்தால் பிரஷ்ஷான பேக்கரி உணவுகள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

சூரி

சூரி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவரான சூரி பல பகுதிகளில் 2 பெயர்களில் ரெஸ்டாரென்ட்களை நடத்தி வருகிறார். அம்மன் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் என்ற பெயரில் அசைவ உணவகத்தையும் நடத்தி வருகிறார்.

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

குணசித்திர நடிப்பிற்கு அதிகமானவர்களின் தேர்வாக இருக்கும் சரண்யா, ஃபேஷன் டிசைனிங் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆதரவற்ற பல பெண்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறார்.

 அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

நடிப்பில் புகழின் உச்சியில் இருந்த சமயத்திலேயே 2005 ல் சினிமாவை விட்டு விலகிய அரவிந்த்சாமி, Talent Maximus என்ற கம்பெனியை நடத்தி வருகிறார்.

டாப்சி பன்னு

டாப்சி பன்னு

பான் இந்தியன் நடிகையான டாப்சி, The Wedding Factory என்ற பெயரில் திருமணம் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனை டாப்சியின் சகோதரி கவனித்து வருகிறார்.

செந்தில்

செந்தில்

80 களில் புகழின் உச்சியில் இருந்த காமெடி நடிகரான செந்தில், தான் சினிமாவில் பிஸியாக இருந்த போதே ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்துள்ளார். வடபழனியில் சொந்தமாக நிறைய வீடுகள், அபார்ட்மென்ட்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

தமன்னா

தமன்னா

தமிழ், தெலுங்கில் புகழ்பெற்ற முன்னணி நடிகையான தமன்னா ஒயிட் அண்ட் கோல்ட் என்ற ஆன்லைன் ஜுவல்லரி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்.

விஜய்

விஜய்

தென்னிந்தியாவில் வசூலை அள்ளிக் குவிக்கும் டாப் ஸ்டாரான விஜய், ஏராளமான திருமண மண்டபங்களை வைத்துள்ளார். தனது அம்மா சோபா பெயரில் மட்டுமல்ல மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோர் பெயர்களிலும் திருமணம் மண்டபம் வைத்துள்ளார். தான் ஆரம்பத்தில் குடியிருந்த 4 வீடுகளை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X