twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்களில் சூரிய கிரகணம்.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை!

    |

    சென்னை: தென்னிந்தியாவில் இன்று தெரியும் அரிய வகை வளைய சூரிய கிரகணம் 75 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்து வருகிறதாம். இந்த அரிய நிகழ்வு அடுத்ததாக 2031ம் ஆண்டு தான் தென்னிந்தியாவில் பார்க்க முடியுமாம்.

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் நிகழும்.

    இந்த சூரிய கிரகண நிகழ்வு பல திரைப்படங்களில் மூட நம்பிக்கையை பிரதிபலிக்கும் விதமாகவும், பேய் படங்கள், சாமி படங்கள் என உலகம் முழுவதும் கிரகணத்தை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியுள்ளன.

    சூரிய கிரகணத்தை மையப்படுத்தி உலகளவில் வெளியான முக்கியமான படங்கள் குறித்து இங்கே காண்போம்.

    அவள்

    அவள்

    2017ம் ஆண்டு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் திரைப்படத்தில், சீன மந்திரவாதி, சூரிய கிரகண சமயத்தில் பெண் குழந்தையை பலி கொடுத்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கையுடன் செயல்படுவதாக பயங்கர த்ரில்லாக அந்த படம் உருவாகி இருக்கும்.

    பொட்டு அம்மன்

    பொட்டு அம்மன்

    கடந்த 2000ம் ஆண்டு ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் ரோஜா, சுவலட்சுமி, கே.ஆர். விஜயா நடிப்பில் வெளியான பொட்டு அம்மன் படத்தில், சூரிய கிரகண சமயத்தில் அம்மனுக்கு சக்தி இருக்காது என்றும், அந்த சமயத்தில் தான் நினைத்தனை சாதித்துக் கொள்ள வில்லன் மந்திரவாதி துடிப்பதும், அதனை பொட்டு அம்மன் எப்படி முறியடித்தார் என்பதுமாக அந்த படம் அமைந்திருக்கும்.

    லிட்டில் ஜான்

    லிட்டில் ஜான்

    ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான லிட்டில் ஜான் படத்திலும் சூரிய கிரகணம் முக்கிய பங்கை வகித்திருக்கும். அந்த சமயத்தில் தான் மூக்குத்தி அம்மனின் வைரமூக்குத்தியை எடுக்க முடியும் என ஆன்மிகம் மற்றும் ஃபேண்டஸி கலந்து அந்த படம் உருவாகியிருக்கும்.

    அப்போகலிப்டா

    அப்போகலிப்டா

    பிரபல ஹாலிவுட் ஹீரோ மற்றும் இயக்குநர் மெல் கிப்சன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான அப்போகலிப்டா படத்தில் முழு சூரிய கிரகணம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஹீரோவின் மரணத்தை தடுக்கும் சக்தியாகவும் அந்த படத்தில் சூரிய கிரகண காட்சி இடம்பெற்றிருக்கும்.

    பாம்பு விழுங்குது

    பாம்பு விழுங்குது

    இதுபோன்று பல படங்களிலும் சூரிய கிரகண காட்சிகள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹைலைட்டான காமெடி என்னவென்றால், பெரிய பாம்பு ஒன்று சூரியனை விழுங்கும் நிகழ்வே சூரிய கிரகணம் என்ற கட்டுக் கதைதான். ஆனால், இன்றோ, அறிவியல் வளர்ச்சியால், பாதுகாப்பான முறையில் பலரும் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

    English summary
    Solar eclipse scenes are creating blind beliefs in movies all arount the world. Melgibson’s Apocalyto to Siddharth’s Aval also portrays solar eclipse
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X