ஏகே61 படத்தோட புதிய அப்டேட்... தெரிஞ்சுக்க நீங்க ரெடியா?
ஐதராபாத் : நடிகர் அஜித்தின் அடுத்தப்படமான ஏகே 61 படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அஜித் பங்கேற்று சிறப்பான வகையில் நடித்து வருகிறார். படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் வலிமை
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வலிமை. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்து ரிலீசானது. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

ரூ.200 கோடி வசூல்
மாறாக உலகளவில் அதிகமான திரையரங்குகளில் ரிலீசான வலிமை, கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் வசூலில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 200 கோடி ரூபாயை தாண்டியது. படத்தில் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் பைக் ரேசிங் காட்சிகள் தூக்கலாக அமைந்திருந்தது.

3வது முறையாக கூட்டணி
இந்நிலையில் ஹெச் வினோத், போனிகபூர் கூட்டணியிலேயே மீண்டும் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். தற்போது ஏகே61 என்ற பெயரில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 11ம் தேதி பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் துவங்கியுள்ள இந்த சூட்டிங்கில் 3 தினங்களுக்கு முன்னதாகவே சென்று அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.

ஏகே61 படத்தின் சூட்டிங்
கடந்த ஒரு வார காலமாக படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கென ஐதராபாத்தில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்கள் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் நெகட்டிவ் கேரக்டரிலும் அஜித் நடித்துள்ளார்.

இருவேறு கதாபாத்திரங்களில் அஜித்?
இருவேறு கதாபாத்திரங்களில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரகுல் பிரீத் சிங் படத்தின் நாயகியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு தற்போது குறிப்பிட்டுள்ளது.

மற்ற நடிகர்களுடன் சூட்டிங்
கடந்த சில தினங்களாக தன்னுடைய தனிப்பட்ட காட்சிகளில் நடித்து வந்த அஜித் இன்று முதல் மற்றவர்களுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடிக்கத் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அஜித் பிறந்தநாளில் டைட்டில் வெளியீடு?
இதனிடையே வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











