வேற லெவல்.. ஹீரோக்கள் மட்டுமல்ல.. இந்த டாப் ஹீரோயின்களும் வரிசை கட்டி ஓட்டுப் போட்டுருக்காங்க!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி என டாப் ஹீரோக்கள் காலை முதலே வரிசை கட்டி ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
Recommended Video
நாங்களும் யாருக்கும் குறைச்சல் இல்லை என தங்களின் ஜனநாயக கடமைகளை டாப் ஹீரோயின்களும் ஆற்றி கெத்து காட்டி வருகின்றனர்.
நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி பாலன், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பிரபல நடிகைகள் வாக்களித்த புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

ஓட்டுப் போட்ட திரிஷா
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் நடிகை திரிஷா தனது வாக்கினை செலுத்தினார். கருப்பு நிற உடை அணிந்து வந்த திரிஷா ஓட்டுப் போட்ட பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வாக்களித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
க/பெ. ரணசிங்கம் படத்தில் தனது ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது மனங்களையும் கொள்ளை கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீபத்தில் தமிழக அரசு சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட்ட போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

செஞ்சிட்டேன்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமாரும் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஓட்டுப் போட்ட பிறகு 'மை' விரலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அவர், தனக்கே உரிய பாணியில் செஞ்சிட்டேன் என கேப்ஷன் போட்டு தெறிக்கவிட்டுள்ளார்.

அன்பிற்கினியாள்
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் அன்பிற்கினியாள் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில், இன்று தனது வாக்கினை அப்பா அருண் பாண்டியன் மற்றும் அம்மாவுடன் இணைந்து பதிவிட்டுள்ளார். குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை வாக்களிக்க தூண்டி வருகிறார்.

நானும் ஓட்டுப் போட்டுட்டேன்
நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ஜனனியும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். நான் ஓட்டுப் போட்டுட்டேன், நீங்க என்று ட்வீட் போட்டுள்ள அவர், எந்தவொரு எக்ஸ்க்யூஸும் சொல்லாமல் வந்து ஓட்டுப் போடுங்க என்கிற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்துள்ளார்.

வாக்களித்த அருவி
அருவி, குட்டி ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலனும் தனது வாக்கை செலுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் நானும் ஓட்டுப் போட்டுட்டேன் என க்யூட்டான போட்டோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் அதிதி பாலன்.


Click it and Unblock the Notifications











