For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெங்கட் பிரபு முதல் வரலக்‌ஷ்மி வரை.. தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியில் இடம்பெற்ற பிரபலங்களின் பெயர்கள்?

    |

    சென்னை: ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. மார்ச் மாதம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டிகள் செப்டம்பரில் துவங்குகின்றன.

    கொரோனா கலவரத்தால் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் துபாயில் பல தரப்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு பிறகு உச்ச கட்ட பாதுகாப்புகளுடன் இன்று தொடங்குகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர்.

    பிக்பாஸில் இந்த முறை இத்தனை பேர்தானா.. இவ்ளோ நாட்கள்தானா? தீயாய் பரவும் புதிய தகவல்!

    7 நம்பர் ஜெர்ஸி

    7 நம்பர் ஜெர்ஸி

    இந்தி தெரியாது போடா பிரச்சனைக்கு பிறகு இந்த டி சர்ட் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. ஏகப்பட்ட வாசகங்களுடன் எடிட் செய்யப்படும் டி சர்ட் புகைப்படங்கள் பொழுதுபோக்கையும், பிரச்சனையையும் ஒரு சேர அழைத்து வருகின்றன. இந்நிலையில், தோனியின் 7 நம்பர் ஜெர்சியில் சினிமா பிரபலங்களின் பெயர் அச்சிடப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    கிரிக்கெட்னா அவ்ளோ உயிர்

    கிரிக்கெட்னா அவ்ளோ உயிர்

    இயக்குநர் வெங்கட் பிரபு, சென்னை 28 படத்தை எடுத்து, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக மாறியவர். இவருக்கு கிரிக்கெட்னா எவ்ளோ உயிர் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தோனியின் 7 நம்பர் மஞ்சள் நிற ஜெர்சியில், VP என்ற இனிஷியல் போட்டுள்ள டி சர்ட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

    கப் முக்கியம் பிகிலு

    கப் முக்கியம் பிகிலு

    சென்னை ரசிகர்களின் ஒரே நம்பிக்கை தல தோனி தான். டீமில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள் என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. எப்படியாவது தோனி வெற்றி பெற வைப்பார். இல்லையென்றால் ஃபைனல்ஸ் வரை அழைத்துச் சென்று விடுவார் என்றே கருதுகின்றனர். நடிகர் சதீஷ் தனது பெயர் போட்ட ஜெர்சி போட்டோவை ஷேர் செய்து, கப் முக்கியம் பிகிலு.. தோனி இருக்க பயமேன்.. சிஎஸ்கேவுக்கு விசில் போடு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    தோனிசம்

    தோனிசம்

    ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த போட்டோவை எடிட் செய்து தங்களின் பெயர்களை அச்சிட்டு வைரலாக்கி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகையான நம்ம வரலக்‌ஷ்மி சரத்குமாரும், வரு என்ற பெயரை போட்டு, தோனிசம், நிச்சயம் இதை எதிர்பார்க்கவே இல்லை. சென்னை அணி ஜெயிப்பதற்காக விசில் போட காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    From Venkat Prabhu to Varalakshmi Sarathkumar cinema celebrities and cricket fans edited their name in Dhoni’s yellow jersey to support CSK.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X