For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

    |

    சென்னை : இந்த வாரத்தில் கார்த்தியின் விருமன் துவங்கி, அடுத்தடுத்து பல பெரிய படங்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரிலீசாக வரிசையில் காத்திருக்கின்றன. இனி அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கு என்றே சொல்லலாம்.

    பெரிய நடிகர்களின், பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் அத்தனையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ஒன்றுடன் ஒன்று மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காக தேதி அட்ஜெஸ்ட் செய்து, மாற்றி வைக்கப்பட்டுள்ளன.

    இருந்தாலும் இவைகள் வசூலை பாதிக்குமா அல்லது போட்டி போட்டு சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரிலீசிற்கு காத்திருக்கும் படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

    மச்சா சாச்சிப்புட்டா மச்சா.. கேரளாவில் விருமன் புரமோஷன்.. அதிதி ஷங்கர் வந்த அழகை பார்க்கணுமே! மச்சா சாச்சிப்புட்டா மச்சா.. கேரளாவில் விருமன் புரமோஷன்.. அதிதி ஷங்கர் வந்த அழகை பார்க்கணுமே!

    விருமன்

    விருமன்

    கார்த்தி மீண்டும் கிராமத்து கெட்அப்பில் நடித்துள்ள படம் விருமன். டைரக்டர் முத்தையா இயக்கி உள்ள இந்த படம் தந்தை - மகன் உறவை பற்றி பேசி உள்ள படம். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், பாடகியாகவும் அறிமுகமாகி உள்ள படம். இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    யாரவி நீ மோகினி படத்திற்கு பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம். வாழ்க்கை, உறவுகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள குடும்ப படம். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் காம்போ இணைந்துள்ள படம். இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    கோப்ரா

    கோப்ரா

    டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கெட் அப்களில் நடித்துள்ள படம் கோப்ரா. கிரிக்கெட் வீரர் இஃபான் பதான், மலையாள நடிகர் ரோஷன் மேத்தீஸ் முக்கிய ரோல்களில் நடித்துள்ள படம். கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாலிளி ரவி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி உள்ள ரொமான்டிக் லவ் ஸ்டோரி.ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி சமூகத்தை பற்றியும் பேசுவதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம். இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகிலன்

    அகிலன்

    பூலோகம் பட டைரக்டர் கல்யாண கிருஷ்ணன் உடன் ஜெயம் ரவி மீண்டும் கைகோர்த்துள்ள படம். படத்தின் பெரும்பாலா பகுதிகளில் துறைமுகத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் பகுதியில் தலைவராக இருக்கும் ஒருவரை பற்றிய கதை. ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள அகிலன் படத்தில் பிரியா பவானிசங்கர் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - ஏஆர் ரஹ்மான்- கெளதம் மேனன் கூட்டணி இணைந்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. கிராமம், சிட்டி என இரு சூழலிலும் நடக்கும் ஆக்ஷன் படம். எழுத்தாளர் ஜெயமோகனின் அக்னி குஞ்சொன்று கண்டேன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். சித்தி இத்னானி, ராதிகா, நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    Recommended Video

    கோயில் ஆட்டத்தில் பங்குபெற்ற சூரி; வைரலாகும் வீடியோ
    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படமக பொன்னியின் செல்வன். எம்ஜிஆர், சிவாஜி என பலரும் முயற்சி செய்தும் முடியாமல் போன கனவை மணிரத்னம் நினைவாக்கி உள்ள படம்.சோழ பேரரசு பற்றிய சரித்திர காவியம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    English summary
    Starting with Karthi's Viruman, which is releasing this Friday, this month and the coming one will see a big film hitting the big screen almost every week. The run will end with the biggest of them all — Mani Ratnam's magnum opus Ponniyin Selvan. Here are the six big films that movie buffs are looking out for in these two months.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X