'தல 59'... அஜித்கூட யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? வெளியானது முழு பட்டியல்!

'தல 59' படத்தின் முழு நடிகர், நடிகையரின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

Recommended Video

தல 59 படத்தில் அஜித் நடிக்கும் வித்யா பாலன் நடிக்கிறார்- வீடியோ

சென்னை : அஜித் நடிக்கும் 'தல 59' படத்தில், அவருடன் நடிக்கும் நடிகர், நடிகையரின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் .

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். படத்தின் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் எனும் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரிய தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கோகுல் சந்திரன் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார். ஆக்ஷன் காட்சிகளுக்கு திலிப் சுப்பராயன் பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்கத்தில் கே.கதிர் கவனிக்கிறார்.

அஜித் பற்றி போனி கபூர்

அஜித் பற்றி போனி கபூர்

படம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், " அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல் , ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

மற்ற நடிகர்கள்

மற்ற நடிகர்கள்

நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன். அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான குழு வேண்டும் என்று விரும்பினேன்.

இயக்குனர் வினோத்

இயக்குனர் வினோத்

அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார். அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது. கதை என்ன பின்னனியில் அமைந்தாலும் இசை அந்த பின்னணிக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நடிகை வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன்

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.

மற்ற நடிகர்கள்

மற்ற நடிகர்கள்

வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்க படும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங், மற்றும் பலர் நடிக்க உள்ளனர்" என அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X