ஃபிலிம் ஃபேர் விருதுகளில் கெத்து காட்டிய சித்தா படம்.. 7 விருதுகளை அள்ளிய கெத்து!

ஹைதராபாத்: 69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது.

69வது SOBHA Filmfare Awards South 2024 இல் மொத்தம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் 15 கேட்டகிரியின் கீழ் 16 விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்ற நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றது. அதேபோல் இந்த படத்தில் நடித்ததற்காக விமர்சகர்களால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான விருதும் சித்தார்த்துக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ பாடலைப் பாடியதற்காக கார்த்திகா வைத்தியநாதனுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசை ஆல்பம், சிறந்த துணை நடிகை என சித்தா படம் விருதுகளை அள்ளிக் குவித்தது.

Filmfare Awards CHITHHA

சித்தா படத்தினைப் போலவே பொன்னியின் செல்வன் படமும் விருதுகளை அள்ளிக்குவித்தது. அதன் விபரத்தைக் காணலாம்.

சிறந்த படம்
சித்தா

சிறந்த இயக்குநர்
சு அருண் குமார் (சித்தா)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்')
விடுதலை: பகுதி 1 (வெற்றி மாறன்)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
விக்ரம் (பொன்னியின் செல்வன்- பாகம் 2)

Filmfare Awards CHITHHA

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்')
சித்தார்த் (சித்தா)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்)
நிமிஷா சஜயன் (சித்தா)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்')
ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா)
அபர்ணா தாஸ் (தாதா)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
ஃபஹத் பாசில் (மாமன்னன்)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்)
அஞ்சலி நாயர் (சித்தா)

Filmfare Awards CHITHHA

சிறந்த இசை ஆல்பம்
திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)

சிறந்த பாடல் வரிகள்
இளங்கோ கிருஷ்ணன் (அக நக- பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
ஹரிச்சரண் (சின்னஞ்சிறு நிலவே- பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
கார்த்திகா வைத்தியநாதன் (கண்கள் ஏதோ- சித்தா)

சிறந்த ஒளிப்பதிவு
ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
தோட்ட தாரணி (பொன்னியின் செல்வன் பாகம் 2)

இதேபோல் மலையாளம், தெலுங்கு திரையுலத்தினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X