காலிபிளவர் பாயா முதல் பீட்ரூட் இடியாப்பம் வரை..மேகா ஆகாஷ் திருமண விருந்து!
சென்னை: சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் இவர், தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட விருந்து வகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு தெரிந்த முகமாக மாறியவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படம் சுமாராகக்கூட ஓடவில்லை. இதனால், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அந்த படத்தின் பாடல்கள் ஹிட்டான அளவிற்கு படம் ஹிட்டாகவில்லை.

நடிகை மேகா ஆகாஷ்: அதன் பின், படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன் படத்தில் நடித்தார். பின் சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், படம் வெளியான வேகத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது.
திருமணம்: நடிகை மேகா ஆகாஷிற்கு அடுத்தடுத்து படவாய்ப்பு வந்த போதும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில், எந்த படமும் அமையாததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்த மேகா, தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், 16ந் தேதி சென்னையில் இவர்களின் திருமணம் தடபுடலாக நடைபெற்றது. மேகா ஆகாஷின் கணவர் சாய் விஷ்ணு திருநாவுக்கரசின் மகன் ஆவார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் காதலை பெற்றோரிடம் சொல்லி சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விருந்து: இவர்களின் திருமணத்தில் தடபுடலாக பரிமாறப்பட்ட விருந்து குறித்து இப்போது பார்க்கலாம். முள்பகல் தோசை, பொடி தோசை, நெய் தோசை, மசாலா தோசை என நான்கு வகையான தோசைகள், மினி இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பொடி இட்லி, சப்பாத்தி, காயின் பரோட்டா, நெய் பரோட்டா, பொறிச்ச பரோட்டா, பீட்ரூட் இடியாப்பம், பிரியாணி, கத்திரிக்காய் தால்ஜா, செட்டிநாடு பன்னீர், காலிபிளவர் பாயா, காய்கறி சால்னா, வத்தக்கொழம்பு சாதம், போண்டா, வாழைக்காய் பச்சி, திருநெல்வேலி அல்வா, பாவ்பாஜி, பேல் பூரி, பானி பூரி, காரப் பூரி, வடை பாவ் என வகை வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டது.


Click it and Unblock the Notifications











