அடுத்தடுத்த அதிரடி.. ‘தளபதி 67‘ படக்குழு வெளியிட்ட முழு அப்டேட் லிஸ்ட்!
சென்னை : தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் ஒன்றன்பின் ஒன்றாக அதிரடியாக வெளியிட்டு, இணையத்தையே திக்குமுக்காட வைத்துவிட்டது. ஒரு மணிநேர இடைவேளையில், அதிரடியாக வந்த அட்டேட்டின் முழு லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.
தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. சோஷியல் மீடியாவில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகி இருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தளபதி 67 படம் குறித்து மாஸ் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்என பதிவிட்டு இருந்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.

தளபதி 67 அறிவிப்பு
அவரது அறிவிப்பை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய டெக்னிஷனின் பெயரை அறிவித்தது. இதில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகவும், இசையமைப்பாளர் அனிருத்,வசன கர்த்தாவாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன வேல் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றுவார்கள் என்றும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார் ஆகியோர் பணியாற்றுவார்கள் என்று அறிவித்தது.

நட்சத்திர பட்டாளம்
இந்த அறிவிப்பில் நடிகர், நடிகைகள் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில் நேற்று ஒரு மணி நேர இடைவேளையில் தளபதி 67 திரைப்பட நடிகர்களை போஸ்டருடன் வெளியிட்டு இணையத்தை திணறவைத்தது தயாரிப்பு நிறுவனம். இதில், அர்ஜூன்,கௌதம் மேனன், இயக்குநர் மிஸ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான்,பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி, பிரியா ஆனந்த் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

யாணும் இணைந்தேன்
மன்சூர் அலிகான் ரசிகரான லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம் போன்ற படங்களில் மன்சூர் அலிகானின் ஹிட் படலான "சக்கு சக்கு வத்திக்குச்சி" ஒரு கட்சியில் வைத்து இருப்பார். இதையடுத்து தளபதி 67 படத்தில் அவரையும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மன்சூர் அலிகான் போஸ்டரில் யாணும் இணைந்தேன் தளபதி 67ல் லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரைவில் விரைவில் சந்திப்போம்

ஒன்லைனே சூப்பர்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில், தளபதி 67 படத்தின் ஒன் லைன் கதையை கேட்டதுமே நான் மிரண்டுவிட்டேன், இந்த படத்தில், நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன் என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன்
இப்படத்தில் இணைந்துள்ள இயக்குநர் மிஸ்கின், தனது போஸ்டரில், 21 ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு.இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என்மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

ஆவலுடன் காத்திருக்கிறேன்
இதில் நடிகை பிரியா ஆனந்த் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாமனன் படத்தின் மூலம் அறிமுகமான பிரியா ஆனந்த், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி படங்களில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் தளபதி 67 படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மிகச்சிறந்த படக்குழுவினருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்பெஷல் பீலிங்
நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளார். தளபதி 67 படத்தில் தினேஷ் நடன இயக்குநராக இருக்கும் நிலையில், சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிகராக நடித்துள்ளார். இது ஒரு ஸ்பெஷல் பீலிங், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு படத்தில் நடிப்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











