மழையில் நனைந்து.. ஷிவானி, ரம்யா போட்ட அசத்தல் ஆட்டம்.. மத்தாப்புடன் களைகட்டிய பிக் பாஸ் தீபாவளி!

சென்னை: பரிசு மழையை கொட்டும் ஸ்பின் வீலை சுற்றிய பிக் பாஸ் போட்டியாளர்களுக்கான பரிசுகள் குவிந்தன.

எலுமிச்சை சண்டை போட்ட போட்டியாளர்களை ஹேப்பியாக்க சனம் ஷெட்டி அந்த வீலை சுற்றும் போது, எலுமிச்சை பழங்கள் அடங்கிய பவுல் பரிசாக கிடைத்தது.

டிஜே மியூசிக் போடப்பட்டு, மத்தாப்பு கொளுத்தி, செம குத்தாட்டம் போட்டு பிக் பாஸ் வீட்டின் தல தீபாவளியை போட்டியாளர்கள் அமர்க்களமாக கொண்டாடினர்.

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் வீட்டில் இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி டாஸ்க்குகள் அரங்கேறின. வனிதா விஜயகுமார், ஐஸ்வர்யா தத்தா, மகத், ஷெரின், விஜயலக்‌ஷ்மி சாண்டி என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் டிவியில் தோன்றி, இந்த சீசன் போட்டியாளர்களுக்கு போட்டிகளை நடத்தி பரிசுகளை கொடுத்தனர்.

வசந்த் அண்ட் கோ விளம்பரம்

வசந்த் அண்ட் கோ விளம்பரம்

என்னடா தீபாவளியை முன்னிட்டு எந்தவொரு விளம்பர டாஸ்க்கும் வரவில்லையே என பார்த்த போட்டியாளர்களுக்கு, வசந்த் அண்ட் கோ நிறுவனம், அதன் பொருட்களை விற்கும் போட்டியை நடத்தியது. சோமசேகர் இதிலும் கூவி கூவி விற்று எல்லோர் மனங்களையும் கொள்ளையடித்து தனது டீமை வெற்றி பெற வைத்தார்.

அல்வா கொடுத்த பிக் பாஸ்

அல்வா கொடுத்த பிக் பாஸ்

பரிசு மழை ஸ்பின் வீல் என போட்டியாளர்களை சுற்ற வைத்து, ஏகப்பட்ட பெரிய பரிசுகள் வரும் என்று பார்த்தால், எலுமிச்சை பழம், கார வகைகள், ஸ்வீட், ஜூஸ், பட்டாசு உள்ளிட்ட பரிசுகள் வந்தன. ஏகப்பட்ட பேருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் வந்து பிக் பாஸ் நல்லாவே அல்வா கொடுத்து விட்டார். டான்ஸ் ஆட வேண்டும் என்பதற்காக, சோமுக்கு டிஜே கிடைத்தது.

செம கலர்ஃபுல்

செம கலர்ஃபுல்

அர்ச்சனா, நிஷா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், கேபி, ஷிவானி, அனிதா சம்பத், சுசித்ரா, சம்யுக்தா என அனைத்து பெண்களும் அழகு ஓவியங்களாகவும், ரியோ ராஜ், சோமசேகர், ஆரி, ஆஜீத், பாலா, ரமேஷ் என ஆண் போட்டியாளர்களும் வேட்டி, சட்டை என கலர்ஃபுல்லாக தீபாவளியை கொண்டாடினார்கள்.

செம குத்து

செம குத்து

சோமசேகரின் தயவால் டிஜே மியூசிக் கிடைத்த நிலையில், கார்டன் ஏரியாவில் போடப்பட்ட ஸ்டேஜில் பிக் பாஸ் போட்டியாளர்கள் களமிறங்கி தல அஜித்தின் ஆளுமா டோலுமா மற்றும் ஏகப்பட்ட மிக்ஸிங் பாடல்களுக்கு செம குத்து குத்தி ஆடினர். அர்ச்சனா, அனிதா, நிஷா எல்லாம் வேற லெவல் பர்ஃபார்மன்ஸ்.

Recommended Video

Rajinikanth, Keerthy Suresh, Sneha & Other Celebrities Diwali celebration
மழையில் நனைந்து ஆடிய ஷிவானி

மழையில் நனைந்து ஆடிய ஷிவானி

ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் பக்கம் தான் ஏகப்பட்ட ரசிகர்களின் பார்வைகள் விழுந்தன. ஷிவானி ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இந்த டிரெஸ் உடன் போட்டோ போட்டிருக்கார் என்றும், தீபாவளி டிரெஸ் சூப்பர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். நடனத்தின் நடுவே மழை பொழிந்த நிலையில், மழையில் நனைத்த படி ஆடியதெல்லாம் வேற லெவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X