ரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பார்சல் பாஸ் டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த வேடிக்கையான தண்டனை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பார்சல் பாஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. வேடிக்கையான விளையாட்டாக இருந்தது இந்த டாஸ்க்.
இதில் வேல்முருகன் பாட மியூஸிக்கல் சேரை ஒத்திருந்தது இந்த விளையாட்டு. இதில் தோற்கும் போட்டியாளர்கள் ஒரு போட்டியாளரை எழுப்பி வேடிக்கையான தண்டனை கொடுக்க வேண்டும்.

ரமேஷ்க்கு வெள்ளை
அதன்படி தோற்றுப்போன நிஷா, ஜித்தன் ரமேஷை அழைத்தார். அவருக்கு தண்டனை கொடுப்பதாக கூறிய அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் முகம் முழுவதும் ஷேவிங் க்ரீமை பூசினார். இதனால் அவரது கறுப்பு தாடி வெள்ளை தாடியானது.

சம்யுக்தாவுக்கு கறுப்பு
அடுத்த தோற்றுப் போன ஆஜித், சம்யுக்தாவை அழைத்தார். அவரது முகம் முழுக்க கறுப்பு மையை பூசினார். மையால் கறுப்பு தாடி, மீசை, என முழுக்க வரைந்து மிரளவிட்டார். சம்யுக்தா தன்னுடைய முகத்தை பார்த்து தானே மிரண்டார்.

நைட்டியில் ஆரி
அடுத்ததாக தோற்றுப் போன ரம்யா பாண்டியன், ஆரியை வைத்து வம்பிழுத்தார். அதாவது ஆரியை நைட்டி மற்றும் மேல் டவல் போட்டு மல மல பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்கள் என்றார்.

பரிசாக ஸ்வீட்
கொடுத்த வேடிக்கையான தண்டனையை ஏற்றுக்கொண்ட ஆரி அப்படி மலமல பாட்டுக்கு மும்தாஜ் போலவே ஆட்டம் போட்டார். இந்தப் போட்டியில் கடைசி வரை நின்று வெற்றி பெற்றது சுரேஷ் சக்கரவர்த்திதான். அவருக்கு பரிசாக ஸ்வீட் வழங்கினார் பிக்பாஸ்.


Click it and Unblock the Notifications











