சிரிப்பை அடக்க முடியல.. குருபாயவே டான்ஸ் ஆட வைத்த goofy gen.. தரமான சம்பவமா இருக்கேப்பா!

சென்னை: சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள மக்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். சிலர் ஆபாசமாக பேசுவது, மற்றவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவது, கவர்ச்சியாக வீடியோக்கள் போடுவது போன்ற வழிகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் வெகு சிலர் மட்டும் தான் தங்களது திறமையை வெளிக்காட்ட சரியான வழியை பின்பற்றுகிறார்கள். அப்படி இருக்கையில் இன்ஸ்டாகிராமில் தனது செஸ் விளையாடும் திறமையை வெளிக்காட்டி, அதன் மூலம் மற்றவர்களையும் செஸ் விளையாடும் ஆர்வத்தை தூண்டி வருகிறார் goofy gen என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்.

இவர் பின்பற்றும் வழிமுறை மிகவும் எளிமையானது தான். அதாவது யாராக இருந்தாலும் தன்னுடன் செஸ் விளையாட வேண்டும். அப்படி விளையாடும் போது அவருடன் விளையாடுபவர் தோற்றுவிட்டால், தோற்றவர்கள் நடனம் ஆட வேண்டும். அப்படி நடனம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் பகிர்வார். இவ்வளவுதான் இவர் பின்பற்றும் வழிமுறை.

goofy gen-ஐப் பொறுத்த வரையில் மிகவும் சொற்பமான ஆட்டங்களில் தான் தோற்றுள்ளார். அப்படி இருக்கையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சமீபத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மெசேஜ் அனுப்பி, இருவரும் விளையாடலாம் என்றும், டான்ஸ் சேலஞ் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத goofy gen விஸ்வநாதன் ஆனந்த் வீட்டிற்குச் சென்று விளையாடியது மட்டும் இல்லாமல், அதில் தோற்றும் போனார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Funny Video Goes Trending On Social About Youtuber Gurubaai and goofy gen 1 V 1 Dance Challenge

இப்படி இருக்கையில் இவருடன் பலரும் செஸ் விளையாடி தோற்று, டான்ஸ் ஆடி வீடியோ போட்டுள்ளனர். சிலர் டான்ஸ் சேலன்ஞ் வேண்டாம், வேறு ஏதாவது செய்யலாம் என்று மீசை, தாடியை எடுக்கும் சவாலுக்கு எல்லாம் சென்று தோற்றுப் போய் உள்ளனர். இப்படி இருக்கையில் பிரபல சினிமா விமர்சகர் பிலிப் பிலிப் யூடியூப் சேனலைச் சேர்ந்த, லோ பட்ஜெட் கௌதம் வாசுதேவ் மேனனான குரு பாயும் இவருடன் செஸ் விளையாடி உள்ளார்.

தோற்ற குருபாய்: தோற்றுவிட்டால் டான்ஸ் சேலன்ஞ் என்று தெரிந்துதான் குருபாய் இதில் கமிட் ஆகிறார். goofy gen -ஐ எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று குருபாய் போராடிப் பார்த்தார். ஆனால் எதுவும் ஒர்க் -அவுட் ஆகவில்லை. இதனால் இறுதியாக தோற்றே போனார். இப்படி இருக்கையில், ஏற்கனவே போட்டுக் கொண்ட சவாலின் படி குரு பாயும் டான்ஸ் ஆடி வீடியோவை goofy gen -க்கு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது மட்டும் இல்லாமல், குருபாய் இன்ஸ்டாகிராம் உடன் கோலாப் போட்டுள்ளார்.

Funny Video Goes Trending On Social About Youtuber Gurubaai and goofy gen 1 V 1 Dance Challenge

டான்ஸ்: குரு பாயும் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்னவென்றால், குருபாய் இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்து இருந்தாலும், மிகவும் ஸ்போர்ட்டிவாக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவப் பார்த்த பலரும் சிரி சிரி என்று சிரித்து வருகிறார்கள். அதேபோல் விஸ்வநாதன் ஆனந்திடம் தோற்றுப் போன goofy gen -ஐப் பார்த்தும் அவர் விஸ்வநாதன் ஆனந்த் வீட்டில் நடனமாடியதைப் பார்த்தும் சிரித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X