5 லட்சம் இந்திய சினிமா தொழிலாளர்களின் தலைவரான ஃபெப்சி சிவா!

By Shankar

அழகியல் கொண்டது சினிமா.. அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர்நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தைத் தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான ஜி.சிவா.

திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி, ஃபெப்சி அமைப்பின் தலைவராக உயர்ந்தவர், இன்று அகில இந்திய அளவில் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் என்ற பெரும் பொறுப்பில் இவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஒரு தமிழர் இந்த இடத்துக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை.

அவரைச் சந்தித்து இந்த வெற்றி எப்படிச் சாத்தியம்? என்றோம்.

பதிலளித்த சிவா, "ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பது தான் அர்த்தமானது எடுத்தவுடனே உயரத்துக்கு போக முடியாது.

ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் ஆர் எச் அசோக் ஒளிப்பதிவு செய்த படங்களில் உதவியாளராக பணியாற்றினேன். கே.பி சார் பெப்சி தலைவராக இருந்த போது அவருடன் இணைந்து பெப்சியில் பணியாற்றினேன். மூன்று முறை செயலாளராக இருந்தேன்.

சினி காமிர அசோசியேசன்ஸிலும் செயலாளராக பணியாற்றினேன். இப்போது பெப்சி தலைவர் என்ற பொறுப்பு. அத்துடன் பெருமையான விஷயம் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக இருக்கிறேன். ஐந்து லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு தலைவர் என்கிற பெரும் பொறுப்பு இது.

ஒரு தமிழன் இந்திய அளவில் போட்டியிட்டு வெற்றி என்பது எனது வெற்றி இல்லை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறேன். ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்து உரிமை கேட்கும் பொறுப்பு நிச்சயம் அவள்ளவு தொழிலாளர்களுக்காகவும் உழைப்பேன்.

G Siva becomes president for All India Film Employees Federation

சரி இப்படியான பொறுப்பு உங்களின் தனிப்பட்ட அடையாளங்களை இழந்து விடாதா?

'தனம்' என்ற தரமான படத்தை இயக்கினேன் நல்ல இயக்குனர் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். 'குலசேகரனும் கூலிப்படையும்' என்ற படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. பொறுப்புகள் கூடக் கூடத் தான் தனிமனித அடையாளம் பளீரென தெரியும்.

சினிமா என்கிற பளபளப்பான துறைகளுக்குள் எவ்வளவோ உணர்ச்சிப் போராட்டங்கள். அவ்வளவையும் சமாளித்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்," என்கிறார் ஜி சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X