முதன்முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஐங்கரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமாரும், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், 'கட்டப்பாவ காணோம்' பட இயக்குநர் மணி, 'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ், 'ஓ மணப்பெண்ணே' பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











