ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இடையே கருத்து வேறுபாடு? விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்!

சென்னை: பத்தாம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகர்களில் ஒருவராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருந்து வருகிறார். தமிழ் சினிமா உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றன. என்னத்தான் தொடர்ந்து படங்களில் நடித்தாலும், தொடர்ந்து இசையமைப்பாளராகவும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

G V Prakash-Chaindavi is reported to be getting a divorce

கைவசம் உள்ள படம்: தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.

விவாகரத்து பெற முடிவு: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்தை பெற முடிவு செய்து இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

காதல் திருமணம்: ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே காதலித்து வந்த இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.

கவலையில் ரசிகர்கள்: உதயம் என்.ஹெச் 4 படத்தில் யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன. தற்போது இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து இருப்பது சினிமா பிரபலங்களை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X