ஜி.வி.பிரகாஷை மிரட்டும் ‘டார்லிங்’ பேய்!

சென்னை: இது பேய்ப் படங்களின் காலம் எனலாம் போல, அந்தளவிற்கு தொடர்ந்து தங்கள் படங்கள் மூலம் ரசிகர்களை மிரட்டிக் கொண்டுள்ளனர் இயக்குநர்கள்

அந்தவகையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகி வரும் புதிய படமான ‘டார்லிங்'-ம் திகில் பட வகையைச் சேர்ந்தது தான் என்பதை நிரூபித்துள்ளது அதன் டீசர்.

வெயில் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், பென்சில் படம் மூலம் ஹீரோ ஆனார். தொடர்ந்து த்ரிஷா இல்லை நயன்தாரா படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷின் மூன்றாவது படம் தான் இந்த ‘டார்லிங்'.

பிரேம கதா சித்திரம்...

பிரேம கதா சித்திரம்...

தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' படத்தின் ரீமேக் தான் டார்லிங். தெலுங்கில் பிரபாகர ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் சுதீர் பாபு, நந்திதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியானது.

சாம் ஆண்டன் இயக்கத்தில்...

சாம் ஆண்டன் இயக்கத்தில்...

தமிழில் சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்யாணி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'யாகாவாராயினும் நா காக்க' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

சஞ்சனாவின் சகோதரி...

சஞ்சனாவின் சகோதரி...

தமிழில் 'ஒரு காதல் செய்வீர்' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான சஞ்சனா-வின் சகோதரிதான் நிக்கி கல்ராணி. இவர் இதற்கு முன் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

வசூலில் சாதனை...

வசூலில் சாதனை...

தெலுங்கில் சுமார் ரூ. 5 கோடி செலவில் தயாரான இந்தப் படம் ரூ. 20 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை புரிந்தது. தமிழிலும் அதே போன்று வசூல் சாதனையைக் குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டீசர்...

டீசர்...

'டார்லிங்' படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், தமிழில் பிரபல நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கடந்த வாரம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X