twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் பட டைட்டிலில் ஜி.வி.பிரகாஷ்...சபாஷ் போடும் ரசிகர்கள்

    |

    சென்னை : சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி ஷங்கர் நடிக்கும் படத்திற்கு சுத்தமான தமிழ் பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் விஜயகாந்த் நடித்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது விஜயகாந்த் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    தமிழ் சினிமாக்களில் தமிழில் டைட்டில் வைப்பது குறைந்து வந்ததால், தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு கொண்டு வந்தது. அதற்கு பிறகும் தமிழ் டைட்டில்கள் குறைந்தன. ஆனால் சமீப காலமாக மீண்டும் தமிழ் டைட்டில்கள், அதுவும் சுத்தமான தமிழ் பெயர்கள் வைக்கப்படுவது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்! தமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்!

    தமிழில் சினிமா டைட்டில்

    தமிழில் சினிமா டைட்டில்

    அப்படி கவுதம் மேனன் சிம்புவை வைத்து எடுக்கும் படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்றும், பிறகு அது மாற்றப்பட்டு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டது. சூர்யா படத்திற்கு எதற்கும் துணிந்தவன், தனுஷ் படத்திற்கு திருச்சிற்றம்பலம், பிரபுதேவா படத்திற்கு பொய்க்கால் குதிரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு தமிழ் டைட்டில்

    ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு தமிழ் டைட்டில்

    அந்த வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இடி முழக்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் கதைக்கு சரியான உணர்வை ஏற்படுத்தும் என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

    ஹீரோவுக்கு ஏற்ற டைட்டில்

    ஹீரோவுக்கு ஏற்ற டைட்டில்

    படத்தின் டைட்டில் பற்றி சீனு ராமசாமி கூறுகையில், இடி முழக்கம் என்பது இடியின் சத்தத்தை குறிப்பது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இடியின் சத்தத்தை கேட்டால், அது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். கோபக்கார இளைஞனான ஹீரோவின் கேரக்டரை உணர்த்தவே இந்த டைட்டிலை வைத்தோம்.

    விஜயகாந்த் பட டைட்டில்

    விஜயகாந்த் பட டைட்டில்

    1980 ல் விஜய்காந்த் நடித்த படத்திற்கு தூரத்து இடிமுழக்கம் என டைட்டில் வைக்கப்பட்டது. இந்த கதைக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை ஒட்டியே இந்த டைட்டிலை வைத்துள்ளோம். இடிமுழக்கம் என டைட்டில் வைத்தால் அதன் தாக்கம் பெரியதாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் தான் கூறினார்.

    தேனியில் தான் ஆரம்பித்தோம்

    தேனியில் தான் ஆரம்பித்தோம்

    முழுவீச்சில் ஷுட்டிங் நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தேனியில் துவங்கினோம். தற்போது கொடைக்கானலில் ஷுட்டிங் நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தேனியின் ஷுட்டிங்கை துவக்க உள்ளோம் என்றார்.

    3 லுக்கில் நடிக்கிறாரா

    3 லுக்கில் நடிக்கிறாரா

    கிராமத்தில் நடைபெறுவதாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். கிராமத்தில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் கோபக்கார இளைஞர் ரோலில் தான் ஜிவி பிரகாஷ் நடிக்கிறாராம். இந்த படத்தில் மூன்று மாறுபட்ட லுக்குகளில் ஜி.வி.பிரகாஷ் தோன்றுவாராம். காயத்ரி நர்ஸ் ரோலில் நடிக்கிறாராம்.

    இத்தனை படங்களுக்கு இசையா

    இத்தனை படங்களுக்கு இசையா

    ஜி.வி.பிரகாஷ் தற்போது அடங்காதே, ஐங்கரன், ஜெயில், கார்த்தி நடிக்கும் சர்தார், சூர்யா நடிக்கும் வாடிவாசல், 4 ஜி, காதலிக்க யாருமில்லை, தனுஷ் நடிக்கும் மாறன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசை, நடிப்பு என இரண்டிலும் பிஸியாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

    English summary
    g.v.prakash gets vijayakanth's 1980's movie title. seenu ramasamy's film with g.v.prakash titled idi muzhakkam. this movie shooting going on with full swing in kodaikanal. in this movie g.v.prakash played village meat shop owner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X