சிம்பொனி இசைக்காக ஜெர்மனி போகிறார் ஜிவி பிரகாஷ்
இசை துறை மட்டுமல்லாமல் ‘பென்சில்', ‘டார்லிங்' படங்கள் மூலம் நடிப்பிலும் அடியெடுத்து வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்கிறார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர்பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளேன்.

உலக அரங்கில் ஜொலிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.
ஜெர்மனியில் உள்ள 'ஸ்டர்ட்கார்ட்' என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப் பதிவுக்காக நான் விரைவில் அங்கு செல்கிறேன்.
இசையுலகில் பிரசித்தி பெற்றவர்கள் பலர் ஜெர்மனியில் தோன்றியுள்ளனர். இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமனின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











