வெயில் டூ அசுரன் வரை ஜீ.வி பிரகாஷின் ராஜ்ஜியம்… 2020லும் தொடரட்டும்
சென்னை: காலத்தால் அழியாத தமிழ் சினிமா வரலாற்றில் தன்னை ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முன்னிறுத்தி உள்ளார் ஜீ.வி பிரகாஷ் குமார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜீ.வி.பிரகாஷ். அந்த படத்தின் உருகுதே மருகுதே என்ற பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்து பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது. இதையடுத்து ஹீரோ என்ற அந்தஸ்தை அவருக்கு தந்தது டார்லிங் படம். இதையடுத்து பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு கடைசியாக சிகப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதனால், இசையமைப்பதை முழுவதும் விட்டுவிடாமல் அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைத்தும் நடிப்பை முழு நேரமாகவும் செய்து வருகிறார். ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்தப்படங்கள் எதுவும் இவருக்கு பெயர் சொல்லும்படி இல்லாததால், இவரது ரசிகர்கள் பலர் ஜீ.வி.பிரகாஷை இசையமைப்பாளராக மட்டுமே பார்க்க விரும்புகின்றனர்.

ஜீ.வி.பிரகாஷ் தற்போது தனது படங்களை தவிர்த்து சூர்யாவின் 'சூரரை போற்று' படத்திற்கு இசையமைத்து வருகிறார். வசந்தபாலன் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் வந்த வெயில் மற்றும் அங்காடி தெரு பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அந்த கூட்டணி மீண்டும் தற்போது இணைய உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
ஜீ.வி.பிரகாஷின் பொல்லாதவன் படத்தில் மின்னல்கள் கூத்தாடும், தாண்டவன் படத்தின் ஒரு பாதி கனவு இன்னும் நம் உதடுகள் முனுமுனுக்கும் பாடல்களை கொடுத்த வெற்றி இசையமைப்பாளர். இவருக்கும் வெற்றி மாறனுக்கும் இருக்கும் பந்தம் மிக பெரியது இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆடுகளம் படத்திற்கும் சிறந்த இசையை ஜீ.வி.பிரகாஷ் கொடுத்து இருப்பார். மேலும் விசாரணை படத்திற்கும் நல்ல பின்னணி இசையை அமைத்து கொடுத்து இருப்பார். சமீபத்தில் வெளிவந்த வந்த அசுரன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்தான்.
மேலும் இவரும் செல்வராகவனும் இணைந்து பணியாற்றிய மயக்கம் என்ன மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரு படங்களும் பாடல்களிலும் பின்னணி சூப்பர் ஹிட்டானவை.

2010 முதல் 2019 வரை ஒரு சகாப்தத்தையே ஜீ.வி படைத்து இருக்கிறார் பல நல்ல படங்களில் இசையமைத்து ஒரு முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதனை தனது சமூக வளைத்தலங்களில் பெருமையுடன் பதிவிட்டு இருக்கிறார் ஜீவி.பிரகாஷ்குமார் .
ஜீ.வி.யின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய் இவர்களின் கூட்டணியில் 5 படங்கள் வந்திருக்கிறது. அடுத்தடுத்து வந்த விஜய் படங்களில் ஜீ.வி இசை இல்லாமல் இருந்தது, தற்போது மீண்டும் இந்த கூட்டணி தலைவி படத்தில் இணைந்துள்ளது. ஜீ.வி பல படங்களுக்கு இசையமைத்து வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2020ல் நமது காதுகளுக்கு விருந்தாக ஜீவியின் இசை நிச்சயம் விருந்தாக இருக்கும்.


Click it and Unblock the Notifications