ஓட்டு போடுவது தான் முக்கியம்.. இளைஞர்களே மறந்துவிடாதீர்கள்.. ஜிவி பிரகாஷ் பேச்சு!

சென்னை: அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் 'ஹாப்பி ராஜ்'. இந்த படத்தில் கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பொள்ளாச்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த ஜிவி பிரகாஷ், இளைஞர்கள் வாக்களிப்பது கட்டாயம் என்றார்.

கதாநாயகனான ஜி.வி. பிரகாஷூக்கு தான் காதலிக்கும் பெண்கள் அனைவரிடமும் பிரேக்கப் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் விரக்தி அடைந்த அவர்,
பெங்களூர் IT கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு கௌரி பிரியாவை பார்த்து காதலிக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், கதாநாயகியின் தந்தை அப்பாஸ் என்ட்ரி கொடுக்கிறார். தனது மகளின் காதலுக்கு சம்மதம் சொல்லி, திருமணத்திற்கு சம்மதம் பேச அழைக்கிறார்.

Gv Prakash instagram
Photo Credit:

ஹாப்பி ராஜ்: ஆனால், சம்மந்தம் பேச ஜி.வி. பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியன் ஒட்டுமொத்த ஊரையும் அழைத்து வர, கடுப்பான அப்பாஸ் திருமணத்தை நிறுத்திவிடுகிறார். இதனால், ஜி.வி - கௌரியும் பிரிந்துவிடுகிறார்கள். மீண்டும் இந்த காதல் ஜோடி இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் 'ஹாப்பி ராஜ்' திரைப்படத்தின் கதை. இப்படம் மார்ச் 27ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரூ 65 லட்சத்தை வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் பேச்சு: 'ஹாப்பி ராஜ்' படம் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், படக்குழுவினர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ஜி.வி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எங்கள் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளோம். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார். தொடர்ந்து பேசிய ஜிவி பிரகாஷ், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்துத் பேசினார். தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்துங்கள். வாக்கு சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். உங்கள் வாக்கின் முக்கியத்துவத்தை தேர்தலில் காட்டுங்கள் என்றார்.

More from Filmibeat

Read more about: gv prakash instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X