Adiyae box office: ஜிவி பிரகாஷின் அடியே முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஜிவி பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியான அடியே திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ள திரைப்படம் தான் அடியே.

இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் அடியே: மல்டிவெர்ஸ் சையின்ஸ் காமெடி படமான இப்படத்தில் தன் காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். திடீரென அவர் ஒரு விபத்தில் சிக்க, ஒரு விஞ்ஞானி டைம் லூப் எனப்படும் காலம் தாண்டி பயணம் செல்லும் ஆராய்ச்சிக்காக பயன் படுத்திகொள்கிறார்.
படத்தின் கதை: இதனால் ஹீரோ வேறொரு உலகத்துக்குள் செல்கிறார். அங்கு நிஜ உலகத்தை விட எல்லாம் சிறப்பாக இருக்கிறது. காரணம் அங்கு அவர் காதலியைக் கரம்பிடித்து மனைவியாக்கி குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்கிறார். மேலும், அந்த உலகத்தில் மிகப்பெரிய மியூசிக் டைரக்டராக இருக்கிறார்.
விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிந்தவுடன், இதுவரை வாழ்ந்தது கற்பனையான வாழ்க்கை என்று தெரிந்ததும், கற்பனை வாழ்க்கையில் இருந்து மீளமுடியாமல் குழம்புகிறார் கடைசியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
முதல் நாள் வசூல்: வழக்கமான காதல் கதை போல இல்லாமல், புதுவிதமாக இயக்குநர் சிந்தித்து இருக்கிறார். இந்த கதைக்கு ஜிவி பிரகாஷ் சரியாக இருப்பார் என தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் முதல் நாளில் 48 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வசூல் அதிகரிக்கும்: நேற்று ஹன்சிகா மற்றும் ஆதி நடித்த பார்ட்னர் திரைப்படம் வெளியான நிலையில்,அடியே திரைப்படத்திற்கு தான் மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











