ஷார்ப்பாக சீவி தயாராக இருக்கும் ஜிவிபிரகாஷின் "பென்சில்".. மார்ச் 25ல் ரிலீஸாமே!
சென்னை: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான பென்சில் மார்ச் 25 ம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
2013 ம் ஆண்டு அறிமுக இயக்குநர் மணி நாகராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான படம் பென்சில்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா நடிக்கவும் பென்சில் மீது ஒரு எதிர்பார்ப்பு திரையுலகில் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் அடுத்தடுத்து இவர் நடிப்பில் உருவான டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஆகிய படங்கள் வெளியான பின்னரும் கூட பென்சில் வெளியாவில்லை.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 2 திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்ததால், தற்போது பென்சிலை விடுதலை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.

2 படங்களின் மூலம் ஜி.வி.பிரகாஷ் பெற்றிருக்கும் பெயரை பென்சில் மூலம் அறுவடை செய்துவிடலாம் என்பது படக்குழுவினரின் திட்டமாக உள்ளது.
தற்போதைய சூழ்நிலைப்படி மார்ச் 25 ம் தேதி பென்சில் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.
அறிமுகப் படமென்பதால் மிகவும் கஷ்டப்பட்டு ஜி.வி.பிரகாஷ் இந்த பென்சிலை சீவியிருக்கிறார். ஷார்ப்பாக இருக்குமா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications