'ஐ பார் யூ யூ பார் மீ சேர்ந்தாக்க சுனாமி' விஜய்யின் செல்லாக்குட்டி பாடல் வரிகள்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் செல்லாக்குட்டி பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. வருகின்ற ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'செல்லாக்குட்டி' பாடலின் ஆரம்ப வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
" ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே
ஐ பார் யூ யூ பார் மீ சேர்ந்தாக்க சுனாமி
யூ பார் மீ ஐ பார் யூ சேர்ந்தாக்க ஐ லவ் யூ"
இவ்வாறு அந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன. ஜி.வி. வெளியிட்ட இப்பாடல் வரிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
விஜய் இப்பாடலைப் பாடியிருப்பதும், விஜய்யின் குரலில் வெளியான பாடல்கள் ஹிட்டடித்து இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
7 பாடல்களைக் கொண்ட தெறி விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று, ஜி.வி.நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தெறி படத்தின் இசை வெளியீடு மார்ச் 20 ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும், என்று தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











