'பென்சில்' கிரைம் திரில்லர்.. ஜி.வி.பிரகாஷைப் பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான பென்சில் ஒருவழியாக இன்று வெளியாகி விட்டது.
'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' என 2 ஹிட்களைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்க்கு பென்சில் ஹாட்ரிக் ஹிட்டாக அமையுமா? என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் ரசிகர்கள் இப்படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
ஹிட் நிச்சயம்
படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் அபிஷா.
திரில்லர்
பென்சில் ஒரு நல்ல கிரைம் திரில்லர் என பாராட்டியிருக்கிறார் கார்த்தி.
சூப்பர்
பென்சில் பார்த்து விட்டேன்.ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா இருவருமே நன்றாக நடித்துள்ளனர் படம் சூப்பர் என்று பதிவிட்டிருக்கிறார் மனோஜ்.
ஒண்ணுமே புரியலை
படம் நல்லா இருக்கா? இல்லையான்னு இதுவரைக்கும் புரியல என்று ஹரி கூறியிருக்கிறார்.
ஹீரோ பேர
எல்லாப் படத்துலயும் ஹீரோ பேர் சிவா தான். பென்சிலும் அதற்கு விதிவிலக்கல்ல என்று விவேக் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் 'பென்சில்' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











