க/பெ.ரணசிங்கம் அப்டேட்: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஜி.பி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கை பவானிஸ்ரீயும் சினிமாவில் நடிக்கப்போகிறார். விஜய் சேதுபதி நடித்து வரும் க/பே ரணசிங்கம் படத்தில் அறிமுகமாகிறார் பவானிஸ்ரீ. அறிமுகமான உடனேயே அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால், பவானிஸ்ரீ உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் சிறு வயதில் முதன் முதலில் ஜென்டில் மேன் படத்தில் இடம்பெற்ற சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலமாக பாடகராக அறிமுகமாகி பின்பு வளர்ந்து வெய்யில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஆனார்.
அவரின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் ஆடுகளம் படத்திற்கு அமைத்த இசையை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கினார்.

தற்போது ஜீ.வி.பிராகாஷ் தங்கை பவானி ஶ்ரீ சினிமாவில் கால் பதிக்க தயாராகிவிட்டார். விஜய் சேதுபதி நடித்து வரும் க/பே ரணசிங்கம் படத்தில் அறிமுகமாகிறார் பவானிஸ்ரீ. க/பே ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார் பவானி ஶ்ரீ.
மேலும் பவானி ஶ்ரீ தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள் இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிக்க உள்ளார் கலைப்புலி.எஸ்.தாணு.
பரியேறும் பெருமாள் படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய தாக்கத்தை கொடுத்த படம். அந்த படத்திற்கு பிறகு, மாரி செல்வராஜ் தனுஷ் படத்தை இயக்கபோவது கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தற்போது தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் தனுஷுக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்தது.
பவானிஶ்ரீ இதற்கு பிறகு சுதா கொங்கார படத்திலும் நடிக்க உள்ளார். சுதா கொங்கார தற்போது சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தை இயக்கி வருகிறார். இதற்கு பிறகு இவர் எடுக்க போகும் படத்தில் பவானிஶ்ரீ நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பவானிஸ்ரீ உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











