Captain Miller - கேப்டன் மில்லர் அப்டேட் சொன்ன ஜிவி பிரகாஷ்.. வேற மாதிரி சம்பவம் இருக்கு

சென்னை: Captain Miller (கேப்டன் மில்லர்) கேப்டன் மில்லர் படம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை ஆழமாகவே பதித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் காரணமாக படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

G.V.Prakash Says Captain Miller update on July 28

கேப்டன் மில்லர்: வாத்தி படத்தின் தோல்விக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இதில் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில்தான் தனுஷுக்கான ஷூட்டிங் முடிந்தது. மேலும் படத்தின் ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் வெற்றி பெறுமா?: வெற்றிக்கு திணறிக்கொண்டிருந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் கம்பேக் கொடுத்தது. இதன் காரணமாக அதே ஃபார்மில் தனுஷ் தொடர்ந்து செல்வார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்க வாத்தி படமோ காலை வாரிவிட்டது. எனவே கேப்டன் மில்லர் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கம் என்பதால் படம் ஹிட்டாக வாய்ப்புகள் அதிகம் என தனுஷ் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் பெரிய துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போலவும் அவருக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போலவும் அந்த லுக் வடிவமைக்கப்பட்டிருந்தது. பீரியட் படமாக கேப்டன் மில்லர் உருவாகியிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட அதை உறுதிப்படுத்தும்வகையில்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இருந்தது.

சம்பவம் இருக்கு: இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில், ஜூலை 28 சம்பவம் இருக்கு. கில்லர், கில்லர் என குறிப்பிட்டிருக்கிறார். ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அன்றைய நாளில் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகலாம். அதைத்தான் ஜிவி பிரகாஷ் கூறுகிறார் என கருதப்படுகிறது.

தனுஷ் 50: கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனுஷ் தனது 50ஆவது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அந்தப் படத்துக்கான பணிகளில் தனுஷ் இப்போது மும்முரமாக இருக்கிறார். கிட்டத்தட்ட 100 வீடுகள் கொண்ட செட் போடும் பணி நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X