Adiyae Trailer - அடியே ட்ரெய்லர்.. பிரதமர் விஜயகாந்த் முதல் ஆஸ்கர் வென்ற பயில்வான் ரங்கநாதவரை..
சென்னை: Adiyae Trailer (அடியே ட்ரெய்லர்) ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் அடியே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நடிப்பில் கவனம்: இதற்கிடையே அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு சரியான அங்கீகாரத்தையோ அல்லது நல்ல நடிகன் என்ற அடையாளத்தையோ பெற்று தரவில்லை.
முக்கிய படங்கள்: அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படஙக்ள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது. இவற்றில் பாலா இயக்கம் என்பதால் நாச்சியார் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் படத்துக்கு போதிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதேசமயம் பேச்சிலர் படம் சூப்பர் ஹிட்டானது.

ஜிவி பிரகாஷின் புதிய படம்: இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் அடியே என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, திட்டம் இரண்டு ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், 96 கௌரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்தை மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
அடியே ட்ரெய்லர்: இந்நிலையி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் நடித்த யோகன் அத்தியாயம் ஒன்று படத்தின் வெற்றி விழாவுக்கு பிரதமர் விஜயகாந்த் செல்கிறார் என்ற வசனத்தோடு தொடங்கும் ட்ரெய்லர் பல தமிழ் படங்களை பங்கம் செய்திருக்கிறது. அதேபோல் பயில்வான் ரங்கநாதனை இசையமைபாளராகவும் காட்டுகிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடியே ட்ரெய்லரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











