»   »  'வெர்ஜின் மாப்பிள்ளை' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஜி.வி.பிரகாஷ்

'வெர்ஜின் மாப்பிள்ளை' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு வெர்ஜின் மாப்பிளை என்று பெயர் வைத்திருக்கின்றனராம்.

கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்த படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி இப்படத்திற்கு வெர்ஜின் மாப்பிள்ளை என்று பெயர் வைத்திருக்கின்றார்களாம். ஏற்கனவே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன.

G.V.Praksh Next Movie Title Virgin Mappillai

மேலும் அப்படத்தில் இடம்பெற்ற நான் ஒரு வெர்ஜின் பையன் எனக்கு ஒரு வெர்ஜின் பொண்ணு தான் வேணும்', வெர்ஜின் பொண்ணுங்களாம் டைனோசர் காலத்துலேயே காணாம போய்ட்டாங்க' போன்ற வசனங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் 'வெர்ஜின் மாப்பிள்ளை' என்று தங்களது அடுத்த படத்திற்கு இவர்கள் தலைப்பு வைத்திருப்பது, மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

English summary
Director Adhik Ravichandran and composer-actor GV Prakash Kumar, who had previously worked together in last year's Tamil blockbuster Trisha Illana Nayanthara, have reunited for another project titled Virgin Mappillai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil