'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி!

By Vignesh Selvaraj

Recommended Video

'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது அடல்ட் கன்டென்ட் படங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

அண்மையில் வெளியான 'ஹர ஹர மகாதேவகி' படத்திற்கு முன் வெளியாகி வசூலைக் குவித்த அடல்ட் கன்டென்ட் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா

த்ரிஷா இல்லனா நயன்தாரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியானது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படம், பலரது எதிர்ப்புகளைப் பெற்றது. அதேசமயம், வசூலையும் வாரிக் குவித்தது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

AAA பார்ட் 2?

AAA பார்ட் 2?

படம் எடுக்கும்போது ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டதால், இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடப் போகிறோம் என்று அறிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படம் ஊத்திக் கொண்டதால், இரண்டாம் பாகம் கிடப்பில் இருக்கிறது.

3டி

3டி

இந்தப் படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக முதல் பட நாயகன் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக். இந்த படம் லவ் ஃபேன்டஸி திரைப்படமாக, 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது.

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

'அரண்மனை' படத்தை தயாரித்த 'விஷன் மீடியா' தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X