100 மில்லியன் வியூஸ்.. குழந்தைகளை கவர்ந்த கும்முற டப்புற.. கெத்துக் காட்டும் காந்த கண்ணழகி!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடல் 100 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை.
இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியான காந்த கண்ணழகி பாடல் யூடியூபில் இமாலய சாதனை படைத்துள்ளது.
100 மில்லியன்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி யூடியூபில் வெளியான காந்த கண்னழகி பாடல் 5 மாதங்களில் 100 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இமான் இசையில் உருவான இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார்.

சிவகார்த்திகேயன் லிரிக்ஸ்
இமான் இசையில் ஃபோக் நம்பராக உருவாகி இருந்த இந்த துள்ளலான பாடலுக்கு சிவகார்த்திகேயன் லிரிக்ஸ் எழுதி இருந்தார். கவுண்டமணியின் ஃபேவரைட் காமெடியான காந்த கண்ணழகி ஆ பேக்ல பூசு என்ற காமெடி வரிகளை அசத்தல் பாடலாக மாற்றி பட்டையை கிளப்பி இருந்தார்.

அழகு
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அனு இம்மானுவேல் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அழகு அனு இம்மானுவேலுக்கு இந்த 100 மில்லியன் வியூஸ் சாதனை பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது. கும்முற டப்புற பாடலுக்கு செம டான்ஸ் போட்டிருப்பார்.

அசத்தும் இமான்
விஸ்வாசம் படத்திற்காக இமான் போட்ட கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில், தற்போது இமான் இசையில் வெளியான காந்த கண்ணழகி பாடல் 100 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. யூடியூபில் பல நூறு மீல்லியன் வியூஸ் சாதனைகளை தனுஷின் ரவுடி பேபி படைத்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் பாடலும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளின் ஃபேவரைட்
விஜய் பாடல்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான பாடல்கள் என்றால் அது சிவகார்த்திகேயனின் பாடல்கள் தான். காந்த கண்ணழகி பாடலில் வரும் கும்முற டப்புற வரிகளுக்கு குத்தாட்டம் போடாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குழந்தைகளின் ஃபேவரைட் ஆன பாடலாக காந்த கண்ணழகி மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











