twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகியுள்ள காஸி!

    By Shankar
    |

    1971ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது, இதுவரை யாரும் அறிந்திராத சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது காஸி என்ற படம்.

    ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சங்கல்ப்.

    முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

    Gaazi, a movie based on 1971 Indo - Pak war

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் படத்தின் நாயகன் ராணா டகுபதி கூறுகையில், "என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குநர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது.

    இப்படமானது யாரும் அறிந்திராத நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. விசாகப்பட்டணத்தில் 71 நாட்கள் கடலுக்கடியில் படமாக்கப்பட்டது. போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும். ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்," என்றார்.

    Gaazi, a movie based on 1971 Indo - Pak war

    இப்படத்தின் இயக்குநர் சங்கல்ப் பேசுகையில், "என்னுடைய முதல் படமே ஒரு சொல்லப்படாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன். இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்," என்றார்.

    Read more about: movie gaazi காஸி
    English summary
    Gaazi is the new movie based on some untold stories of 1971 Indo - Pakistan war
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X