கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கால் செண்டர் டாஸ்க்கில் கேபி கேள்வி கேட்ட விதமும் அதற்கு சோம் பதில் சொன்ன விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கின் பார்ட் 2 இந்த வாரம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதில் கடந்த வாரம் வாடிக்கையாளர்களாக இருந்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் கால் செண்டர் ஊழியர்களாக உள்ளனர்.

எதுக்கு வந்தீங்க?

எதுக்கு வந்தீங்க?

இதில் முதல் காலராக ஆஜித் அர்ச்சனாவுக்கு கால் செய்தார். அவரை தொடர்ந்து கேபி, சோம சேகருக்கு கால் செய்தார். முதல் கேள்வியாய் சோம சேகரிடம் எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க என்று கேட்டார் கேபி.

பிரேக்கப் டிப்ரஷன்

பிரேக்கப் டிப்ரஷன்

அதற்கு 2010ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சில் பங்கேற்றது, தனக்கு பிரேக்கப் ஆனது, 2 வருடங்கள் பயங்கர டிப்ரஷனில் இருந்தது என்பது உள்ளிட்ட பல பதில்களை கூறினார்.

நான் நானாக இருக்கேன்

நான் நானாக இருக்கேன்

தொடர்ந்து பேசிய கேபி, நீங்க எதுக்காக பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்கணும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சோம், நான் எங்கே கோபப்படனுமோ அங்கேதான் கோபப்படுகிறேன். எல்லா இடத்துலேயும் ஒப்பினியன் சொல்லணும் என்று அவசியமில்லை. டாஸ்க் எல்லாம் ஒழுங்கா பண்றேன். நான் நானா இருக்கேன் என்றார்.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

மீண்டும் பேச தொடங்கிய கேபி, நாமினேஷனில் இருக்கும் 7 பேர் குறித்து, அவர்களிடம் உள்ள, மக்களுக்கு தெரியாத நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என்றார். அதற்கு ஓகே என்ற சோம், ஆரியிடம் உள்ள நல்ல விஷயம், நம்முடைய கருத்தை முன் வைக்க வைக்க சொல்வான், சொல்ல வர்ற விஷயத்தை சொல்லி விடுவான் என்றார்.

விளையாட ஆரம்பித்துவிட்டார்

விளையாட ஆரம்பித்துவிட்டார்

தொடர்ந்து சனம் ஷெட்டி குறித்து பேசிய சோம், டாப்புள் கார்டு டாஸ்க்கின் போது விட்டுக்கொடுக்க கூடாது என்று உறுதியாக இருந்தா. அந்த குவாலிட்டி எனக்கு பிடித்திருந்தது என்றார். நிஷா குறித்து பேசிய சோம், எண்டெர்டெய்ன்மெண்ட் பண்ண வந்திருக்கேன் என்றார். ஆனால் இப்போ நல்லா விளையாட ஆரம்பித்துவிட்டார் என்றார்.

பேச வேண்டிய இடத்தில்

பேச வேண்டிய இடத்தில்

மேலும் ஆஜித் பேசாமல் இல்லை, எங்கே பேசனுமோ பேசுகிறான் என்றார். அனிதாவிடம் பிடித்தது அவருடைய ஒப்பினியனை பயப்படாமல் சொல்வார், அவருடைய தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

தூக்கத்தில் உளருவார்

தூக்கத்தில் உளருவார்

ரம்யா குறித்து பேசிய சோம், தூக்கத்தில் ரம்யா உளருவார், ஏமாற்றி ஐஸ் க்ரீம் வாங்கிடுவார், டான்ஸ் ஸ்டெப் பிடிக்கும், ரம்யா குட் ப்ளேயர் என்றார். ஷிவானி அழகா பேசுறாங்க அது பிடிக்கும் என்றார்.

உண்மையாய் பேசுவார்

உண்மையாய் பேசுவார்

தொடர்ந்து பேசிய கேபி நான் நாமினேஷனில் இல்லை, இருந்தாலும் என்னிடம் பிடித்த 3 விஷயங்களை சொல் என்றார். அதற்கு கூச்சப்படாமல் கலாய்ப்பார், கேபியின் டான்ஸ் பிடிக்கும், கண்ணை பார்த்து பேசுவார், உண்மையாய் பேசுவார், அது எனக்கு பிடிக்கும் என்றார்.

கேபி ஃபேன்ஸ் க்ளப்

கேபி ஃபேன்ஸ் க்ளப்

வேற ஏதாவது கேள்வி இருக்கா என்று கேட்ட சோம், ஒரு நிமிடம் இருங்கள் என்று வேறொரு காலில் கேபி ஃபேன்ஸ் க்ளப் பேசுவதை போல் பேசி. தனது காலை கட் பண்ணினார் சோம். இதனை தொடர்ந்து சோம சேகருக்கு 5 ஸ்டார்களை கொடுத்தார் கேபி.

ஸ்வீட் கான்வெர்சேஷன்

ஸ்வீட் கான்வெர்சேஷன்

போன வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சோம்க்காக கேபி தனது காலை கட் பண்ணினார். இருவரும் ரொம் ஸ்வீட்டாக பேசியதாக கமல் பாராட்டினார். அதையே சொல்லி சோமை சேவ் செய்தார். இந்நிலையில் இந்த வாரமும் அவர்களுக்குள் ரொம்பவே ஸ்வீட்டான ஒரு கான்வெர்சேஷன் இருந்தது.

Recommended Video

Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH
கமல் பாராட்டுவாரா?

கமல் பாராட்டுவாரா?

பாலாஜி ஆரியை தவறான நபராக காட்ட முயற்சித்து தனது பக்கம் உள்ள குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைத்தார். ஆரியை விளக்கமே அளிக்கவிட வில்லை. சண்டை போடும் நோக்கத்திலேயே பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் கேபியும் சோமும் பேசிக்கொண்ட விதம் பாராட்டுக்குரிய வகையில் இருந்ததால் நிச்சயம் கமல் இதை பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X