அச்சச்சோ.. என்னா ஆக்ரோஷம்.. அர்ச்சனாவாக மாறிய கேபி.. ஆரியுடன் செம மல்லுக்கட்டு!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் கேபி மல்லுக்கு நின்றதை பார்த்த ரசிகர்கள் அவர் அர்ச்சனாவாக மாறிவிட்டதாக கூறி வருகின்றனர்.
Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ரோபோ டாஸ்க்கில் பாலாஜியின் மனிதர் குல அணியில் இருந்த ரியோ, அர்ச்சனாவின் ரோபோக்கள் அணியில் இருந்த கேபிக்கு ஃபேவராய் இருந்தார்.
கேபி சிரித்ததை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பிக்க விட்டார். அதோடு ஆரி, தனது மெத்தடை பயன்படுத்தி கேபியிடம் பேசி பிரேக் பண்ணியது குறித்தும் ரியோ கேபிக்கு ஆதரவாக பேசினார்.

டாஸ்க் பிரேக்கில்
குறிப்பாக கேபி ரோபோவாக இருந்தபோது ஆரி தனது மெத்தடை பயன்படுத்தி அவரை பிரேக் பண்ண முயற்சித்தார். இதனை தொடர்ந்து டாஸ்க் முடிந்த பிரேக்கில், ரியோ, அர்ச்சனா, நிஷா மற்றும் கேபி ஆகியோர் கார்டன் ஏரியாவின் ஒரு கார்னரில் ஸ்மோக்கிங் ஏரியா பகுதியில் பேசினர்.

உன்னை காப்பாற்ற..
அப்போது தன்னை அன்ஃபிட், தகுதியில்லை என்றே ஆரி கூறினார் என தனது சகாக்களிடம் புகார் பத்திரம் வாசித்தார் கேபி. இதனைக் கேட்ட ரியோ, உன்னை காப்பாற்றதான் ட்ரை பண்ணேன். ஆமாம் சிரிச்சேன் என்று கூறியிருந்தால் உள்ளே கூட்டிட்டு வந்திருப்போம் என்று கூறி எதிரணிக்காக விளையாடினார்.

பிளேட்டை மாற்றிய ரியோ
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இதுகுறித்து பேசிய கமல், ரியோவை செய்த காரியத்தை சுட்டிக்காட்டி அவரது முகத்திரையை கிழித்தார். ஆனால் அதனை ஒப்புக்கொள்ளாத ரியோ இப்போ சிரிக்கலன்னா இதுக்கு மேல பெரிய ஆப்பு இருக்கு என்றுதான் சொன்னேன் என அப்படியே பிளேட்டை மாற்றி பேசினார்.

மோசமான ஆட்டிட்யூட்
அதனை தொடர்ந்து பிரேக்கில் ஆரி இதுதொடர்பாக ரியோவிடம் கேட்டார். அப்போது இதில் என் பெயரும் இன்வால்வ் ஆகியிருக்கிறது ஆகையால் நானும் பேசுவேன் என்று ஆரியிடம் எகிறினார் கேபி. ஏன் உங்களிடம் அதை சொன்னார் என்று ஆரி கேட்க, சொன்னதால் என்னாச்சு என்று மோசமான ஆட்டிட்யூட் காட்டினார் கேபி.

கேபி வாக்குவாதம்
அதற்கு பதில் சொன்ன ஆரி அதுக்குதான் கேம்ம கேம்ம விளையாடுங்கன்னு சொல்லுங்கன்னு சொல்றேன் என்றா. அப்போது பதில் சொல்லிய கேபி, எனக்கு அது ஸ்ட்ரேட்டர்ஜி மாதிரி பட்டுச்சு என்றார். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேபியிடம் நான் உன்னை கேட்கவே இல்லை நீ ஏன் பேசுகிறாய் என்றார் ஆரி.

அவசியமே இல்லை...
அதற்கு ரொம்பவே ஆக்ரோஷமான கேபி, நீங்கள் எங்கேயும் பேசவில்லையா? சம்பந்தம் இல்லாத இடத்தில் சென்று ஒப்பினியன் சொல்வீர்கள் என அர்ச்சனா ஸ்டைலில் கையை ஆட்டியும் குத்தியும் பேசினார். இதனை பார்த்த ஆரி
இதுக்கு இவ்ளோ கையை ஆட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஆரியிடம் எகிறிய அன்பு கேங்
அதற்கு கையை ஆட்டிதான் பேசுவேன் என்று ஆரியிடம் அர்ச்சனா பாணியில் மல்லுக்கு நின்றார். தொடர்ந்து ஆரியிடம் ரியோ, கேபி மற்றும் அர்ச்சனா என அந்த டீமே எகிறியது. ஆனால் பாயிண்ட்டை பிடித்த பாலாஜி, பிரேக்கில் பேசியதற்கான காரணம் என்ன என்று கேட்டு திக்குமுக்காடச் செய்தார்.


Click it and Unblock the Notifications











