கமல் முன்பு பாலாஜியை பொட்டில் அடித்தாற்போல் கேள்வி கேட்ட கேபி.. வேற லெவல் சவுக்கடி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கேங்கை பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாலாஜிக்கு கேபி கொடுத்த பதிலடி வேற லெவலில் இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக உள்ளனர். அவர்களில் ஆரி மட்டுமே எந்த குரூப்பிலும் இல்லாமல் உள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனா மற்றும் அவரது டீமால் உங்களுக்கு என்ன பிரச்சனை என பாலாஜியை கேட்டார் கமல். அதற்கு அடுக்கடுக்கான காரணங்களை முன் வைத்தார் பாலாஜி.

நாமினேட் செய்யமாட்டார்கள்

நாமினேட் செய்யமாட்டார்கள்

அதாவது, 6 பேர் ஃபேமிலியா விளையாடும் போது பெஸ்ட் பர்ஃபார்மர் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று வரும் போது அந்த டீமுக்குள் நாமினேட் செய்து கொள்ள மாட்டார்கள். பெஸ்ட் பர்ஃபார்மருக்கு நாமினேட் செய்வார்கள், ஆனால் வொர்ஸ்ட் பர்ஃபார்மருக்கு நாமினேட் செய்ய மாட்டார்கள்.

ரொம்ப ஏமாற்றமா இருக்கும்

ரொம்ப ஏமாற்றமா இருக்கும்

இதனால் தகுதியில்லாதவங்க நாமினேஷனில் இருந்து தப்பிச்சுடுவாங்க. இப்போ இப்படி ஃபேமிலியா விளையாடிட்டு கடைசி 30 நாள், 20 நாள் எனற் வரும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி குத்தணும். அப்போது அது ரொம்ப ஏமாற்றமா இருக்கும்.

கேபி கேள்வி

கேபி கேள்வி

அதுக்குதான் இப்போவே எல்லார் கூடயேயும் டிஸ்டன்ஸ் பண்ணிக்கலாம் என்றார். இந்த வீட்டுல அன்பு எனக்கு தேவையில்லை. அன்பு கேம்குள்ள எனக்கு வேண்டாம் என்றார் பாலாஜி. பாலாஜி பேசியதை கேட்ட கேபி, நீ இதுவரை சம்யுக்தாவையோ அல்லது ஷிவானியையோ நாமினேட் செய்து ஒரு நாள் கூட நான் பார்த்தது இல்லை.

எனக்கு ஒரு நியாயமா?

எனக்கு ஒரு நியாயமா?

உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? நான் இந்த வீட்டிலேயே அதிக க்ளோஸா இருக்குறது ஆஜித் கூடதான். ஆனால் அவனை நாமினேட் பண்ணியிருக்கேன். அவன் ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார் என்று கமலுக்கு முன்பே பாலாஜியை கிழித்துவிட்டார்.

மறுத்த பாலாஜி

மறுத்த பாலாஜி

கேபி பேசியதை கேட்ட கமல், அந்த வீட்டில் நீங்களும் ஒரு டீமாய் இருப்பதாக கேபி சொல்கிறார் பாலாஜி, அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். அதற்கு நான் அதை மறுக்கிறேன் சார். யாருமே நாமினேட் பண்ணாத ஒருத்தர நான் எப்படி நாமினேட் பண்ண முடியும்? என்றார்.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
சம்யுக்தா விளக்கம்

சம்யுக்தா விளக்கம்

அதனைக் கேட்டு சிரித்த கேபி, இப்படிதான் எல்லாருக்கும் ரீசன் வரும்போது உனக்கு பிடிச்சவங்க என்றதும், ரீசன் இருந்தாலும் அது உனக்கு தெரியலை என்று பாலாஜியை படுபங்கமாக வச்சு செய்தார். அவரை தொடர்ந்து பேசிய சம்யுக்தா, இதை நான் பாலாஜியிடமே சொல்லியிருக்கேன், அந்த டீம் அவர்களுக்குள் க்ளோஸாக இருக்கிறார்கள், ஆனால் யாரையும் கார்னர் பண்ணுவதில்லை என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X