நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன்.. தூக்கி சுமந்த சுரேஷ் சக்ரவர்த்தியால் கமலிடம் எமோஷனலான கேபி!

சென்னை: உடம்பு முடியாத போதும் தன்னை தூக்கி சுமந்த சுரேஷ் சக்கரவர்த்திக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என கமலிடம் உருக்கமாக கூறினார் கேப்ரியல்லா.

பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனுக்கான டாஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் ரியோ, வேல் முருகன் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் போட்டியிட்டனர்.

சுரேஷ் ஆதரவு

சுரேஷ் ஆதரவு

ரியோவுக்கும் வேல்முருகனுக்கும் இரு குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே ஆதரவு கொடுத்தார்.

தோளில் சுமக்க வேண்டும்

தோளில் சுமக்க வேண்டும்

போட்டியாளர்களை ஆதரவாளர்கள் தோளில் சுமக்க வேண்டும் என்று கூறிய பிக்பாஸ் நீண்ட நேரம் சுமக்கப்படுபவர்களே வெற்றியாளர்கள் என்றார். இதனை தொடர்ந்து வேல்முருகனை ஆரி சுமந்திருக்க, ரியோவை பாலாஜி சுமந்தார்.

விலகிய கேபி

விலகிய கேபி

ஆனால் கேப்ரியல்லாவை சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே தூக்கி சுமந்தார். ஏற்கனவே முதுகு வலி இருந்ததால் அவதிப்பட்ட சுரேஷ் அதை பொருட்படுத்தாமல் கேப்ரியல்லாவை தூக்கி சுமந்தார். ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தி கஷ்டப்படுவதை விரும்பாத கேப்ரியல்லா போட்டியிலிருந்து விலகினார்.

கமல் விசாரிப்பு

கமல் விசாரிப்பு

இந்த காட்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. வியற்க விறுவிறுக்க சுரேஷ் சக்கரவர்த்தி கேப்ரியல்லாவை தூக்கி சுமந்ததை பார்த்த நெட்டிசன்கள் சுரேஷை ஒரே நாளில் ஹீரோவாக்கி விட்டார்கள். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய கமல், கேபியிடம் விசாரித்தார்.

நன்றியுடன் இருப்பேன்

நன்றியுடன் இருப்பேன்

அப்போது அவர் எனக்காகவோ அல்லது அவருக்காகவோ அப்படி செய்யவில்லை. கேமுக்காக பண்ணினார். உடம்பு முடியாத போதும் அவர் என்னை தூக்கி சுமந்தார். அதற்காக காலம் முழுக்க அவருக்கு நன்றியுடன் இருப்பேன் என்று உருக்கமாக பேசினார்.

டச்சிங் சம்பவம்

டச்சிங் சம்பவம்

தொடர்ந்து பேசிய கமல், அவர் உங்களை தூக்கி சுமந்ததை பார்க்கும் போது ஒரு நல்ல ஃபீல் வந்தது. அதே ஃபீல் பலருக்கும் வந்திருக்கும் என நான் நம்புகிறேன். இந்த சீசனில் டச்சிங் சம்பவம் இது என சுரேஷையும் கேபியையும் பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X